அரசு ஊழியர்கள் வெறும் ‘வோட் பேங்க்’கா? மே.வ, ராஜஸ்தான் மாதிரி உடனே கொண்டுவாங்க.. விஜயகாந்த் கோரிக்கை
அரசு ஊழியர்களுக்காக திமுக அரசிடம் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : திமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி தேர்தல் காலங்களில் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவது அழகல்ல என விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
2006 தேர்தல் முதல் வாக்குறுதி அளித்து வரும் திமுக இதுவரை நிறைவேற்றாதது வருத்தமளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

புதிய ஒய்வூதிய திட்டம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமானது, 1956ல் தொடங்கி 1964ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் 1987ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இத்திட்டத்தை அதிமுக அரசு கடந்த 31-03-2003ஆம் தேதியுடன் ரத்து செய்துவிட்டது. மாற்றாக 31-03-2003 முதல் புதிய ஒய்வூதிய திட்டத்தைக் கொண்டு வந்தது.

திமுக வாக்குறுதி
இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் என எந்த பயனும் இல்லை. இதை உணர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, 2006 தேர்தலில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை.

நிறைவேற்றவில்லை
மீண்டும் அதே வாக்குறுதியை 2011, 2021 தேர்தல்களிலும் திமுக அளித்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்ததோடு அத்திட்டத்தில் இணையவும் இல்லை. மாறாக பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகிறது. இதேபோலவே, திரிபுரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் அரசுகளும் புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளன.

ஓட்டு வங்கியாக மட்டுமே
தங்கள் தந்த தேர்தல் வாக்குறுதியின்படி பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி தேர்தல் காலங்களில் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவதும் அழகல்ல. எனவே திமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக கொண்டு வந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நலனை காத்திட வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications