தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை.. 2-3 நாட்களில் டிஸ்சார்ஜ்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இவருக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கு, இவரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலின் போது விஜயகாந்த் சில நாட்கள் மட்டும் பிரச்சாரம் செய்தார்.

சுற்றுப்பயணம்
உடல்நிலை சரியாக ஒத்துழைக்காத காரணத்தாலும் கொரோனா காலம் என்பதாலும் பாதுகாப்பு கருதி விஜயகாந்த் பெரிய சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா சோதனையும் செய்யப்பட்டது.

மூச்சு
மூச்சு பிரச்சனை என்பதால் அவருக்கு கொரோனா சோதனை காலையில் எடுக்கப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சு திணறல் வேறு காரணங்களுக்காக ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கண்காணிப்பு
அவருக்கு கொரோனா இல்லை ஏன்றாலும், இன்னும் இரண்டு - மூன்று நாட்கள் அவரின் உடல்நிலை கண்காணிக்கப்படும். அவருக்கு உடலில் பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறார். உடல்நிலை சீராக உள்ளது.

மூன்று நாட்கள்
இதனால் மூன்று நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இன்று விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை குறித்து தேமுதிக தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலர் விசாரித்தனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா இல்லை என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications