அதிமுகவுடன் பேசி வருகிறோம்.. இன்னும் 2 நாளில் சொல்கிறோம்.. தேமுதிக சுதீஷ் அறிவிப்பு!
தேமுதிக தனது லோக்சபா கூட்டணி முடிவை எடுக்க இன்றும் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
Recommended Video

சென்னை: அதிமுகவுடனான லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த முடிவை தேமுதிக இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கும் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரை முடிப்பதற்கு கூட இத்தனை ஆலோசனை கூட்டங்கள் நடந்து இருக்காது. ஆனால் தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது. இது தேமுதிக கட்சிக்குள் நடத்திய 4வது ஆலோசனை.
இது இல்லாமல் அதிகாரபூர்வமற்ற முறையில் நிறைய ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேமுதிக தனது லோக்சபா கூட்டணி முடிவை எடுக்க ஆலோசனை கூட்டம் நடத்தியது.

ஆலோசனை
சென்னையில் விஜயகாந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடந்தது.

யார் எல்லாம்
இந்த ஆலோசனையில் விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ், துணை பொதுச்செயலாளர் சுதீஷ், கட்சியை எம்எல்ஏக்கள், அவைத்தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதில் அதிமுக உடன் கூட்டணி வைப்பது குறித்து மட்டுமே பேசி இருக்கிறார்கள்.

பேட்டி அளித்தார்
தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இந்த ஆலோசனைக்குபின் பேட்டி அளித்தார். அதில், அதிமுக உடன் பேசி வருகிறோம். கூட்டணி ஆலோசனைகள் நடந்து வருகிறது. நாங்கள் திமுக உடன் பேசவில்லை.

2 நாள்
இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம். அதிமுகவுடனான கூட்டணி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும். அதன்பின் போட்டியிட போகும் தொகுதிகள் குறித்து நாங்கள் அறிவிப்போம் என்று சுதீஷ் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications