இழுபறி முடிந்தது.. தேமுதிக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. 4 தொகுதிகள் ஒதுக்கீடு
லோக் சபா தேர்தலுக்கான அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை: லோக் சபா தேர்தலுக்கான அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மூன்று வாரமாக தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தது. அதிமுகவுடன் தேமுதிக பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
ஆனாலும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகமல் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் தற்போது கூட்டணி ஒப்பந்தம் சுமுகமாக நடந்து முடிந்து உள்ளது.

தொடர் கூட்டம்
இதுவரை தேமுதிக சார்பாக 6க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேமுதிக தனது லோக்சபா கூட்டணி முடிவை எடுக்க ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதன்பின் அதிமுக தலைவர்களுடன் ஆலோசனை நடந்தது.

ஒப்பந்தம் ஆலோசனை
சென்னை ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் இறுதிக்கட்ட ஆலோசனை நடந்தது. இதில் இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஹோட்டல் கிரவுன் பிளாசா சென்றார். அவர் அங்கு அதிமுக தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்.

எத்தனை நிமிடம்
சுமார் 20 நிமிடம் இந்த ஆலோசனை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முக்கிய அதிமுக நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அதேபோல் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

எத்தனை இடம்
தேமுதிகவுக்கு அதிமுகவில் 4 தொகுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது. கடும் இழுபறிக்கு பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த தொகுதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில்,தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடும். அதிமுக - தேமுதிக இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தேமுதிக கட்சி 4 லோக்சபா இடங்களில் போட்டியிடும். 2019 சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக ஆதரவு தரும், என்று கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications