பாஜக கூட்டணியில் இணையத் தயாராகும் தேமுதிக.. பிரேமலதா எடுக்கப்போகும் முடிவு.. உற்று நோக்கும் அதிமுக
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அரசியல் களத்தில் அனல் வீச தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தேமுதிக இணைவதற்காக சாத்தியக்கூறுகள் தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தெந்த தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என்பது பற்றி 7ஆம் தேதிக்குப் பிறகு பிரேமலதா அறிவிப்பார் என்றும் அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலர்ந்த தாமரை: கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேனி லோக்சபா தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது பாஜக கூட்டணி. சட்டசபை தேர்தலில் கூட்டணி பிரிந்தது. பாஜக அதிமுக இணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்தன. கை மேல் பலனாக குறிப்பிடத்தகுந்த இடங்களில் அதிமுக வென்று வலிமையான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது. தமிழ்நாட்டிலும் 4 சட்டசபை தொகுதிகளில் தாமரை மலர்ந்தது. பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் நுழைந்தனர்.

பிரிந்த கூட்டணி: அதே நேரத்தில் அமமுக, தேமுதிக தனியாக கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர் கொண்டன. எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட பெற முடியாமல் போனது. இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலிமையாக இருக்க பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி விட்டது. தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர நினைத்த முயற்சிகள் இதுவரை கைகூடவில்லை.
அதிமுக வியூகம்: கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது அதிமுக.
மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் கவலையில்லை. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுகவை தோல்வி அடைய செய்து, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று கூறி வியூகங்களை அதிமுக வகுத்து வருகிறது.
பாஜக 3வது அணி: அதே நேரத்தில் தமிழக பாஜக தலைமை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மூன்றாவது உருவாக்கும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜக +பாமக+தேமுதிக+ ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + ஏசி சண்முகம், மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக வியூகம்: தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெற கூடாது என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. இதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது. அதை முறியடி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்கவைக்கவும், கூடுதலாக கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும், தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றவும் பாஜக தலைமை வியூகங்களை வகுத்து வருகிறது.
பாஜக வியூகம்: லோக்சபா தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் கணிசமான இடங்களை பெற பாஜக தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. யாருடன் யார் கூட்டணி என்று இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக மறைமுகமாக ஆலோசனை செய்து வருகிறதாம். அதற்குக் காரணம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பாஜக காட்டும் பாசமும் நேசமும்தான்
விஜயகாந்த் மீது பாசம்: கடந்த மாதம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சில நாட்களுக்கு முன்பு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனால் பாஜக - தேமுதிக இடையே நல்ல உறவு உள்ளது. அதோடு தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி கேப்டன் விஜயகாந்த் பற்றி புகழ்ந்து பேசி பாராட்டி இருந்தார்.
தேமுதிக முடிவு என்ன: இந்த நிலையில்தான் பாஜகவுடன் கூட்டணியில் இணைய தேமுதிக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வரும் 7ஆம் தேதியன்று தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சி, விருதுநகர், சேலம் ஆகிய லோக்சபா தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், ஒரு ராஜ்யசபா எம்பி பதவியையும் தேமுதிக கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே மேடையில் கூட்டணி தலைவர்கள்: இதனிடையே பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா வரும் 11ஆம் தேதி சென்னை வருகிறார். அப்போது, தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தமிழகம் வருவதற்குள் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியை ஒருங்கிணைத்து தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றுவதற்கு அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications