Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூவி கூவி அழைக்கும் திமுக-அதிமுக! கண்டுகொள்ளாமல் கலங்கடிக்கும் தேமுதிக! பிரேமலதாவின் ப்ளான்-பி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு நிலையில் அதிமுக தான் தவித்துக் கொண்டிருக்கிறது. பாஜக தவிர்த்து வேறு எந்த கட்சியும் உறுதியாக கூட்டணிக்கு வரவில்லை. பாமக வருவது உறுதி என சொல்லப்படும் நிலையில் தேமுதிக போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. கடைசி நேரம் வரை திமுக அதிமுக என இரு கட்சிகளுடன் பேரம் நடத்துவதற்காகவே இந்த முடிவு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

2026 சட்டமன்ற தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும் இந்த 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.

திமுக கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது தான். அதில் தொகுதி பங்கீடு மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக இன்னும் சில கட்சிகள் அந்த கூட்டணியில் இருக்கிறது.

DMDK DMK AIADMK

திமுக கூட்டணி

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் லேசாக கேட்கத் தொடங்கி இருந்தாலும் திமுக தான் இறுதி முடிவு எடுக்கும். கடந்த ஆண்டு போலவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுக கூட்டணியை இன்னும் இறுதி செய்யவில்லை. பாஜக மற்றும் ஏற்கனவே பாஜகவோடு கூட்டணியில் இருந்த ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்கின்றனர். பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் கூட்டணிக்கு சம்மதித்துள்ளார் அன்புமணி. விரைவில் பாமக -அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேமுதிக கூட்டணி

ஆனால் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்த தேமுதிகவின் நிலைப்பாடு இன்னும் தெளிவாக தெரியவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, ஜனவரி மாதம் கட்சியின் மாநாடு நடக்கும் அப்போது கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என கூறி இருக்கிறார். இந்த நிலையில் தொகுதி பேரம் மற்றும் வெற்றி கூட்டணியுடன் கூட்டணி என்பதில் பிரேமலதா விஜயகாந்த் தெளிவாக இருப்பதாகவும், அதனால்தான் அதிமுக திமுக அழைப்பு விடுத்தும் பதிலளிக்காமல் இருக்கிறார் என்கின்றனர்.

பிரேமலதா விஜயகாந்த்

இந்த நிலையில் தேமுதிகவில் என்ன நடக்கிறது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சொல்லப்போனால் திமுக அதிமுக என இரு கட்சிகளையும் பகைத்துக் கொள்ள தற்போதைக்கு பிரேமலதா விரும்பவில்லை. காரணம், விஜயகாந்த் மரணத்தின் போதும், பிரேமலதா விஜயகாந்த் தாயார் மரணத்தின் போதும் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

திமுக-அதிமுக

தொடர்ந்து முக ஸ்டாலினையும் எடப்பாடி பழனிச்சாமியையும் தனித்தனியாக சந்தித்து பேசினார் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிலையில் தமிழக அரசியலில் புதிய வரவாக விஜய் வந்திருக்கும் நிலையில் அதிமுக -தவெக - தேமுதிக கூட்டணி அமைந்தால் அது வெற்றி கூட்டணியாக இருக்கும் என திமுக நினைக்கிறது. அதனால் தான் பாமகவையும் தேமுதிகவை கூட்டணிக்கு வரவழைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

2026 தேர்தல்

அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்து வரும் நிலையில் இழந்த அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு எம்பி எம்எல்ஏக்கள் அல்லது எட்டு சதவீத வாக்குகள் தேவை. இதனால் கடைசி நேரத்தில் எந்த கூட்டணியின் கை ஓங்குகிறதோ அந்த கூட்டணியுடன் கூட்டு சேரலாம் என்பது தான் பிரேமலதா விஜயகாந்த்தின் எண்ணம் எனவும், அதனால்தான் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி அழைத்தும் இதுவரை கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருக்கிறார் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+