பாமகவின் வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு கோரிக்கைக்கு தேமுதிக எதிர்ப்பு- சசிகலாவுக்கு முழு ஆதரவு!
சென்னை: வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேன்டும் அல்லது எம்பிசி பட்டியலில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கைக்கு தேமுதிக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு பெண்ணாக சசிகலாவை ஆதரிப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தேமுதிக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் காலம் தாழ்த்தாமல் அதிமுக தரப்பு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும்.
வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமகவின் கோரிக்கை. இதேபோல் அனைத்து ஜாதியினரும் கோரிக்கை வைத்தால் என்னவாகும்? சசிகலா ஒரு பெண் என்பதால் அவரை முழுமையாக ஆதரிக்கிறேன்.
சசிகலாவால் அதிமுகவுக்கு பாதிப்பா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்துக்கும் 100 நாட்களில் தீர்வு காணப்பட்டதா? என்பதை அந்த கட்சியினர் விளக்க வேண்டும்.
3-வது அணியை பற்றி பேசுவதற்கான காலம் இப்போது இல்லை. சட்டசபை தேர்தலில் தேமுதிக நிச்சயம் பெரிய வெற்றியை பெறும். கூட்டணி தொடர்பாக விஜயகாந்த்தான் இறுதி முடிவை அறிவிப்பார். விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தால் என் குரல் சட்டசபையில் ஒலிக்கும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications