யாருடன் கூட்டணி? பிப்.17-க்கு முன் அறிவிக்கிறது தேமுதிக.. பிரேமலதா கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்" என்றும் "இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பு கூட்டணி அறிவித்து விடுவோம்" என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17 ஆம் தேதி வெளியாகும் நிலையில் அதற்கு முன்பாக தேமுதிக கூட்டணி அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய கட்சியான தேமுதிக இதுவரை யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகத்தை, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.

Premalatha Vijayakanth

சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தொடங்கி உள்ளது தேமுதிக. தேமுதிக சார்பில் விருப்ப மனுக்களை பெறும் முன் விஜயகாந்த் நினைவிடத்தில் வழிபாடு செய்தார் பிரேமலதா.

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் பணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். விருப்ப மனுக்களை தொண்டர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சி அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேமுதிக சார்பில் 2026 தேர்தலுக்கான விருப்ப மனு இன்று தலைமை அலுவலகத்தில் தொடங்கி உள்ளது. இதை மகிழ்ச்சியாக சொல்கிறேன். கேப்டனிடம் வைத்து ஆசிர்வாதம் பெற்று தற்போது தொடங்கி உள்ளது. 12 ஆம் தேதி வரை விருப்ப மனு வாங்கப்படுகிறது... காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து தேமுதிக வெற்றி பெறும். இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பு கூட்டணியை அறிவிப்போம். யூகங்களுக்கு நான் பதில் சொல்வது இல்லை. எங்கள் மாவட்ட செயலாளர் நிர்வாகிகள் யாருடன் இந்த முறை கூட்டணி வைக்க வேண்டும் என சொல்கிறார்களோ அந்த கூட்டணியில்தான் வைப்போம். தேமுதிகவின் எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்தக் கூட்டணி முடிவு செய்வோம். மேலும் தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு கூட்டணி அறிவித்து விடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+