மறைந்த விஜயகாந்த் பெயரில்.. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் பிரேமலதா!
சென்னை: தேமுதிக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்வில், மறைந்த விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை வழங்கினார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதா.
தேமுதிக சார்பில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதை இன்று வரை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தங்களின் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுவினை விநியோகம் செய்து வருகின்றனர். விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளார் பிரேமலதா.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.
தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள் அனைவரின் விருப்பத்திற்கு இணங்க மூன்று நாட்கள் நீட்டிப்பு செய்து விருப்பமனுக்களை 13.02.2026 முதல் 15.02.2026 மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இருந்தும் தேமுதிக நிர்வாகிகள் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து கட்சி தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை வழங்கினார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதா.
தேமுதிக கூட்டணி குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என பிரேமலதா தெரிவித்தார். அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் மூலமாக இந்த தேர்தலில் வெற்றி பெற்று, அந்த வெற்றியை விஜயகாந்த்திற்குச் சமர்ப்பணம் செய்வோம் என்று கட்சியின் சார்பாக உறுதிமொழி எடுத்துள்ளோம். இதுவரை நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications