இது வேலைக்கு ஆகாது.. ஒரேயடியாக மனசை விட்ட டிடிவி.. கண்டுகொள்ளாத சசி கேம்ப்.. தேமுதிகவுக்கு ஷாக்?!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக தற்போது அமமுகவுடனும் மோதலில் இறங்கி உள்ளது.. அமமுக - தேமுதிக இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பரபரக்க வைக்கும் சில சம்பவங்கள் நடந்துள்ளன.
எங்களுக்கு 25 இடங்கள் வேண்டும்.. ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும் என்று அதிமுகவிடம் தேமுதிக விடாப்பிடியாக கேட்டு வந்தது. 25 இடங்கள் கொடுக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம் என்று தேமுதிக கடுமையாக மிரட்டி வந்தது.
ஆனால் 13 இடங்களுக்கு மேல் கொடுக்க முடியாது, ராஜ்ய சபா சீட்டெல்லாம் கொடுக்கவே முடியாது என்று அதிமுக உறுதியாக இருந்துவிட்டது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.

வெளியேற்றம்
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக தனியாக போட்டியிடவே விரும்பியது. மக்கள் நீதி மய்யம் தேமுதிகவை அழைத்து இருந்தாலும் கூட ஏனோ மநீம உடன் கூட்டணி வைக்க தேமுதிக விரும்பவில்லை. இதையடுத்து அமமுக ஒரு பக்கம் தேமுதிகவுக்கு கூட்டணி வைக்க அழைப்பு விடுத்தது. சசிகலா மீது இருக்கும் மரியாதையால் பிரேமலதாவும் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.

ஆனால் என்ன
சசிகலா சிறையில் இருந்து வருவதற்கு முன்பே அவருக்கு ஆதரவாக பிரேமலதா பேசி இருந்தார். சசிகலா தமிழகத்தின் பவர் சென்டராக மாற வாய்ப்புள்ளது என்று நம்பி தேமுதிக அவருக்கு ஆதரவாக பேசி வந்தது. இந்த நிலையில்தான் அதிமுகவுடன் கூட்டணி சேர முடியாத சூழ்நிலையில் அமமுகவிடம் தேமுதிக தீவிரமாக பேசியது. இரண்டு நாட்களாக இந்த பேச்சு நடந்தது.

பேச்சு நடக்கிறது
கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை தினகரனும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கூட்டணியில் தேமுதிக 50 இடங்களை கேட்டு இருக்கிறது. அதிலும் அமமுக வலுவாக இருக்கும் பல தொகுதிகளை கேட்டுள்ளது.

இறங்கி வரவில்லை
இந்த கோரிக்கையில் இருந்து தேமுதிக கொஞ்சமும் இறங்கி வரவில்லை. .இதை தொடர்ந்து தேமுதிகவிற்கான கூட்டணி கதவை அமமுக அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. தேமுதிகவின் இந்த கோரிக்கையை அமமுக விரும்பவில்லை. 50 தொகுதி எல்லாம் கொடுக்க முடியாது என்று தினகரன் மறுத்துவிட்டார் என்கிறார்கள்.

இறங்கி வரவில்லை
இதில் சசிகலா தரப்பும் எந்த விதமான மத்தியசமும் பேசவில்லை. அமமுக குறித்த விஷயம் எதிலும் சசி தலையிடவில்லை. இதையடுத்து தற்போது அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மொத்தமாக தேமுதிக நிறுத்தி உள்ளது. இதனால் பெரும்பாலும் தேமுதிக தனியாகவே போட்டியிடும் என்று தகவல்கள் வருகின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications