விஜயகாந்த் மியாட்டிலிருந்து வீட்டுக்கு வந்ததுமே இப்படியா? அதிரடி+ உருக்கமான இரு அறிக்கைகள்!
சென்னை: நான் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது எனக்காக பிரார்த்தனை செய்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும் முன்னாள் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்துக்கு திடீரென சளி, காய்ச்சல், இருமல் காரணமாக அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கடந்த மாதம் இறுதியில் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணியும் , நடிகர் நாசரும் மியாட் மருத்துவமனையில் தலைமை மருத்துவரை சந்தித்து கேட்டறிந்தனர். அதில் விஜயகாந்த் தாமாகவே சுவாசிக்கிறார். அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை செய்ததாக கூறப்படும் தகவல்கள் எல்லாமே பொய்யானது. அப்படி எதுவும் செய்யவில்லை.
அவருக்கு வெறும் சளி பிரச்சினைக்குத்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கூடிய விரைவில் வீடு திரும்புவார் என தலைமை மருத்துவர் தெரிவித்ததாக ஆர்.கே. செல்வமணி ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் கேப்டன் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள். வதந்தியை யாரும் நம்பாதீர்கள், அவர் விரைவில் வீடு திரும்பி நம்மை சந்திப்பார் என பிரேமலதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்றும் மீண்டும் ஒரு விளக்கத்தை பிரேமலதா வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தெரிவித்ததுடன் அவருக்கு தீவிர சிகிச்சை எல்லாம் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதை பார்த்தவுடன் தொண்டர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி செய்யப்படவில்லை என்பது அவருடைய கழுத்தை பார்த்தாலே நன்றாக தெரிந்தது. இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு சென்னை பெருவெள்ளம் குறித்து பிரேமலதா பேசுகையில், கேப்டன் மீது ஏன் வன்மத்தை கக்குகிறீர்கள் என கேட்டு கண்ணீர் விட்டார்.
நான் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது,
— Vijayakant (@iVijayakant) December 11, 2023
எனக்காக பிரார்த்தனை செய்து , வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். #தேமுதிக pic.twitter.com/riLgUtBOxo
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் நேற்று முன் தினம் கூட பரவின. அவருக்கு நுரையீரல் துறை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவருக்கு முழுவதுமாக ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் முடிந்த நிலையில் அவர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார் என மியாட் மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் தொண்டர்களும், ரசிகர்களும் பொதுமக்களும் நலம் விரும்பிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வந்ததும் வராததுமாக வரும் 14 ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் கூடுகிறது என அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது உடல்நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பூரண நலம் பெற வேண்டிய வாழ்த்திய திரை உலகை சேர்ந்த அனைவருக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் பிரார்த்தனை செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications