திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேடையேறிய தேமுதிக சுதீஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் அதிமுக.. பின்னணி
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகியின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் தேமுதிகவின் எல்.கே சுதீஷும் பங்கேற்றார். திமுக கூட்டணியுடன் தேமுதிக நெருக்கம் காட்டுவதாக கூறப்படும் நிலையில், சுதீஷ் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனம் பெற்றுள்ளது.
ராஜ்யசபா சீட் வழங்கும் விவகாரத்தில் அதிமுக - தேமுதிக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் இரண்டு பேர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதில் ஒரு இடத்தை தேமுதிக எதிர்பார்த்தது. எனினும், தேமுதிகவிற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் ராஜ்ய சபா தேர்தலின் போது ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

காங்கிரஸ் விழாவில் எல்.கே சுதீஷ்
இதனால், தேமுதிக அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. எனினும், வரும் தேர்தலில் கூட்டணி யாருடன் என்பது குறித்து வரும் ஜனவரி மாதம் கடலூர் மாநாட்டுக்கு பிறகுதான் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார். இதற்கு இடையே, சமீப காலமாக திமுகவிற்கு அணுசரணையாக தேமுதிக நடந்து கொள்வது போல ஒரு போக்கும் தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
இத்தகைய சூழலில்தான், சென்னையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் விழாவில் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே சுதீஷ் பங்கேற்றுள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிகே பெருமாள் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் சுதீஷ் பங்கேற்றார். இந்த விழாவில் திமுகவின் டி.ஆர் பாலு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோரும் பங்கேற்று இருந்தனர்.
பிரேமலதா விளக்கம்
காங்கிரஸ் விழாவில் சுதீஷ் பங்கேற்று இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய டிஆர் பாலு, எல்.கே சுதீஷை தம்பி என அழைக்கலமா? என்று கேட்டார். மேலும் இப்படி பேசினால் இதை வைத்து ஏதாவது எழுதி விட போகிறார்கள் என்றும் டி ஆர் பாலு பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றது அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது.
எனினும், இது தொடர்பாக பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது நண்பர் சிகே பெருமாள் பற்றிய நூல் என்பதால் சுதீஷ் பங்கேற்றுள்ளார். நண்பர் என்ற முறையில் காங்கிரஸ் நடத்தும் விழாவில் சுதீஷ் பங்கேற்றுள்ளார்" என்று கூறினார்.
எந்த தொடர்பும் இல்லை
பிரேமலதா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, "கூட்டணி ஆட்சி என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு. மாநில கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி இருந்தால் நல்லது. சுதீஷ் தனது நண்பர் என்ற அடிப்படையில் கலந்து கொண்டுள்ளார். இதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் சுதீஷ் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கும் கூட்டணிக்கும் கட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் அவுங்க அவுங்க ஆட்சி அமைக்கும் என்று சொல்வார்கள். தமிழகம் முழுக்க அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எங்கள் கட்சியின் வளர்ச்சியை நாங்கள் கவனம் செலுத்துகிறோம்" என்றார்.
அதிமுகவுடன் பேரம் பேச
கூட்டணி தொடர்பாக பேசும் போது, பிடி கொடுக்காமல் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "கடலூரில் ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் மிகத்தெளிவாக அறிவிப்போம்" என்றார். சுதீஷ் தனிப்பட்ட முறையில் நட்பில் அடிப்படையில் இந்த காங்கிரஸ் நிர்வாகி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டாலும் அரசியலிலும் எந்த ஒரு சந்திப்பும் சாதாரணமாக கருதமுடியாது என்பது அரசியல் நிபுணர்களின் வாதமாக இருக்கிறது.
அதிமுகவுடன் தனது பேர வலிமையை அதிகப்படுத்தும் வகையில் கூட தேமுதிக தனது கதவை திறந்துவைத்து இருப்பது போல பிம்பத்தை உருவாக்கலாம் என்பதும் அரசியல் விமர்சகர்கள் பார்வையாக உள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications