திமுக ஒரு ரவுடி கட்சிங்க... அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்கிறார்
Recommended Video

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்தின் தலைமை அலுவலகத்தில் சில்லறை விற்பனை மையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
மேலும், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக இணைக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட மையத்தை திறந்து வைத்தார்.

பிளாஸ்டிக் - மாற்று பொருட்கள்
அதனைத் தொடர்ந்து. செய்தியாளர்களை சந்தித்த அவர் அப்போது பேசியதாவது: கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் உரங்கள் பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்படாமல் அரசு நிர்ணயம் செய்த அளவீட்டின்படி தயாரிக்கப்பட்ட மாற்று பொருட்களை வைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஸ்டாலின் மீது பாய்ச்சல்
மேலும், கோடநாடு விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார் என்றும், இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் என்று தெரிவித்தார்.

திமுக ஒரு ரவுடி கட்சி
கொலை, கொள்ளை போன்ற நடவடிக்கைகளில் திமுக தான் ஈடுபடும் என்றும் திமுக ஒரு ரவுடி கட்சி என்றும் தெரிவித்தார். மேலும் எப்படிப்பட்ட ஜகஜால கில்லாடி வேலை செய்தாலும் தமிழக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை போக்க முடியாது என்றார்.

எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றனர்
முன்னதாக, 2-வது முதலீட்டாளர் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழ் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக ஏறத்தாழ 10 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றனர் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications