சட்டப்பிரிவு 356ல் மட்டுமே ஆளுநர் இப்படி செய்யலாம்.. மற்றபடி எந்த அதிகாரமும் இல்லை: திமுக வழக்கறிஞர்
சென்னை: "அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டப்பிரிவு 356ன் படி மட்டுமே ஆளுநர் மாநில அரசை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். அதைத்தாண்டி அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு உரிமை இல்லை." என திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிச்சையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியுள்ளதைத் தொடர்ந்து, ஆளுநருக்கு, அமைச்சரை நீக்க அதிகாரம் இல்லை, இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை தொடர்பாக பேசியுள்ள திமுக வழக்கறிஞர் சரவணன் அண்னாதுரை, "அரசியலமைப்புச் சட்டத்தை துச்சமாக மதித்துள்ளார் ஆளுநர் ரவி. இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆட்சி அமைப்பதற்கு அழைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் அதிகாரம் கொண்டவர்.
அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டப்பிரிவு 356ன் படி மட்டுமே ஆளுநர் மாநில அரசை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். அதைத்தாண்டி அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு உரிமை இல்லை. நாளை மணிப்பூர் கலவர விவகாரத்தில் சரியான முறையில் கையாளவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்தால் பாஜகவினர் ஏற்றுக்கொள்வார்களா?
பாஜகவின் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது, கொலை வழக்குகள் இருக்கிறது. அவர்கள் மீதெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆளுநர் மாளிகை வெளியிட்ட பேப்பருக்கு இருக்கும் மதிப்பு கூட ஆளுநரின் உத்தரவுக்கு கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications