Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதிய சொல்றீங்களே.. அப்போ மோடி இனப்படுகொலையை தூண்டினாரா? பாயிண்டை பிடித்த திமுக வழக்கறிஞர் சரவணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனாதனத்துக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அப்படி என்ன பேசினார் அவர்? விரிவாக பார்ப்போம்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தார் என மிகப்பெரிய வதந்திகளை பரப்புபவரால் தவறாக ட்வீட் செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் முக்த் பாரத் என்று அழைத்ததும் இனப்படுகொலைக்கான அழைப்பா? பிறகு அவர்களால் எப்படி உதயநிதி ஸ்டாலின் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தார் என்று சொல்ல முடியும்.

 DMK Advocate Saravanan on Udhayanithi stalin sanantan dharma speech

இது ஒரு போலி செய்தி. அதுதான் வெறுப்பு பேச்சு. வெறுப்பை பரப்புவதற்காக இத்தகைய வதந்திகளை பரப்புபவர்கள்தான் சட்டத்தின் முன்பாக பதிலளிக்க வேண்டும். கடுமையான சாதியை கட்டமைப்பை அழித்தொழிக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

100 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் முன்னேற்றம் இருந்ததா? அவர்களால் மறுமணம் செய்துகொள்ள முடியுமா? பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததா? இல்லையே? பட்டியலின மக்கள், பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், சூத்திரர்கள் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார்களா? சொத்துக்கள் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டார்களா? தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனரா? இல்லையே?

இவை அனைத்துமே சனாதன தர்மம் கற்பித்த கடுமையான சாதிய கட்டமைப்பால் ஏற்பட்டதுதான். இதை நாங்கள் எதிர்க்கிறோம். தற்போது திமுக ஒடுக்கப்பட்ட பழங்குடியின, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடுகிறோம். இதனை பாஜகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இந்துக்களுக்கான கட்சி, இந்துக்களின் நலனுக்கான கட்சி என்கிறார்கள். அது தவறு.

பாஜக என்ற கட்சி உயர்சாதி இந்துக்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது. உயர்சாதி இந்துக்களுக்காக, உயர்சாதி இந்துக்களால், உயர்சாதி இந்துக்களே நடத்தும் கட்சி பாஜக. அவர்கள் வேறு யாரை பற்றியும் கவலைப்படவில்லை. எனவேதான், அவர்கள் சனாதன தர்மத்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இதை எது போதித்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம்.

நாங்கள் சாதி பாகுபாடு அற்ற சமத்துவமான சமுதாயத்தை விரும்புகிறோம். ஒவ்வொரு மனிதனும் பிறப்பின் அடிப்படையில் நடத்தப்படாமல் அவனது செயல்களின் அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும். திராவிட கட்சியின் கொள்கை என்பது இதுதான். இதுதான் எங்களின் முன்னோர்களுடைய கொள்கையாகும். தொடர்ந்து இதனை பரப்புவோம். எங்களுக்கு இந்த வதந்திகளை பார்த்து எந்த பயமும் இல்லை." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+