4 தொகுதி இடைத் தேர்தல்.. 2 நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்கிறது திமுக
சென்னை: 4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை 2 நாட்களில் திமுக அறிவிக்கும் என்று தெரிய வருகிறது.
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளதால் திமுகவில் வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தாலும் வேட்பாளர்களை ஸ்டாலின் தேர்வு செய்துவிட்டதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். திருப்பரங்குன்றத்தில் கடந்த முறை போட்டியிட்ட டாக்டர் சரவணன் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். சேடப்படி முத்தையா மகனும், மாவட்டச்செயலாளருமான மணிமாறனும் போட்டியிட விரும்புகிறார்.
மதிமுகவில் இருந்து வந்தவர் டாக்டர் சரவணன். வைகோவோடு ஸ்டாலின் இணக்கமாக உள்ள நிலையில் சரவணனுக்கு சீட் கொடுத்து வைகோவின் வருத்தத்தை சம்பாதிக்க வேண்டாம் என்பது மதுரை உ.பி.க்கள் தலைமைக்கு வைக்கும் கோரிக்கை.
அரவக்குறிச்சியைப் பொறுத்தவரை செந்தில்பாலாஜி தான் அதில் துளி அளவும் மாற்றமில்லை. சூலுர் தொகுதியில் போட்டியிட சன்.ராஜேந்திரன், தளபதி முருகேசன் போன்றோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்களாம். ஆனால் ஸ்டாலினோ பொங்கலூர் பழனிசாமியை களமிறக்கி விடலாம் என நினைக்கிறாராம்.
ஏனென்றால் வாழ்வா சாவா என்ற தேர்தலில், அறிமுகம் இல்லாத வேட்பாளரை போட்டு அவர்கள் கோட்டைவிட்டு விடக்கூடாது என எண்ணுகிறாராம் ஸ்டாலின். பொங்கலூர் பழனிசாமியை பொறுத்தவரை செலவு செய்ய பணத்திற்கு குறையில்லை, சூலுர் பகுதியில் நன்கு அறிமுகமானவரும் கூட என்கின்றனர் லோக்கல் உ.பி.க்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைக்குள் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications