திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி
சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பதற்காகவே 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம் என சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறினார்.
திமுக கூட்டணியில் இந்த முறை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., ம.திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்பட 26 கட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதில் காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இன்னும் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும் தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. ஏற்கனவே திமுகவுடன் 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளை கேட்டு வந்தது. இதற்கு திமுக 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன் வந்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் 6 தொகுதிகள் பெற வேண்டும் என்பதே கோரிக்கையாக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் திமுக 5 தொகுதிகளே தர முன் வந்தது.
இதையடுத்து தான் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பதற்காகவே 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம் என சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications