விஜய் பற்ற வைத்த நெருப்பால் திமுக அணியில் தீ பிடித்ததே.. காங்கிரஸ் எம்பியின் கருத்தால் கொந்தளிப்பு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் பேசிய "ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது" என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டதால் திமுகவினர் கடும் கோபமடைந்துள்ளனர். மாணிக்கம் தாகூரின் எக்ஸ் பக்கத்தில் மிக கடுமையாக திமுகவினர் விமர்சித்தும் வருகின்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள விசிகதான் ஆட்சியில் பங்கு- அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை முன்வைத்தது. இது திமுக கூட்டணியை சிதறடிக்கும் சதித் திட்டம் என்கிற விமர்சனமும் எழுந்தது. காங்கிரஸும் மேம்போக்காக அதிகாரப் பகிர்வு பற்றி பேச தொடங்கியது.

தற்போது நடிகர் விஜய், விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டில் பகிரங்கமாகவே, ஆட்சியிலும் அதிகாரத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தருவோம் என அழைப்பு விடுத்தார். இதனையடுத்து நேற்று முதலே சிறிய கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் என பலரும் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் கருத்தை திமுக கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்ற நிலையில் காங்கிரஸும் இப்போது கை கோர்த்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் எம்பியான மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பக்கத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது என விஜய் மாநாடு பற்றி எதுவும் குறிப்பிடாமல் மொட்டையாக வெள்ளோட்டம் விடுவதைப் போல பதிவிட்டிருந்தார். அவ்வளவுதான் திமுகவினர் தற்போது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பின்னூட்டங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதில், மற்ற காங்கிரஸ் எம்பிஸ் எல்லாம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் போது நீங்கள் ஏன் வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாய் என்று இப்போது தான் புரிந்தது என திமுக ஆதரவாளர் Raj Vimal பதிவிட்டுள்ளார். திமுகவை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் "ரொம்ப வருஷமா Waste Luggageஅ சுமந்துட்டு இருக்குறோம், கிளம்புங்க ரிலாக்ஸா “எங்களுக்காக”உழைச்சிக்கிறோம் என கோபத்தைக் கொட்டியிருக்கிறார். இதேபோல திமுகவுடனான உறவை காங்கிரஸ் முறித்துக் கொள்ளட்டும்; பேசாமல் தவெகவில் சேர்ந்துவிடுங்கள் என்றெல்லாம் அதில் பதிவிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications