திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள்? 4 பேர் குழு அமைத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில், சுப்பராயன் எம்பி, முத்தரசன், பழனிசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வரும் 27 ஆம் தேதி முதல் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக வழங்கியிருந்தது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தோழர் எஸ்.கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. நான்கு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக் குழு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், திமுகழக தலைமையோடு தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை நடத்த
தோழர்கள் மு.வீரபாண்டியன், (மாநிலச் செயலாளர்) இரா. முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி., கோ.பழனிசாமி ஆகிய நான்கு உறுப்பினர்கள் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு வரும் 27.02.2026 ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என்று கூறியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications