Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நாங்க யாருமே வர மாட்டோம்” ஆளுநர் தேநீர் விருந்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

Republic day RN Ravi dmk

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் அவையிலிருந்து வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறைதான். இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. அவர் இப்பொறுப்பிலிருக்கும்வரை இத்தகைய அடாவடிகளைத் தொடரவே செய்வார். அதற்கு ஏதேனும் சாக்குபோக்குகளையும் சொல்வார்.

ஆளுநர் உரையில் என்ன இடம்பெற வேண்டுமென்பதை ஆளும் பீடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள்தாம் முடிவு செயவர் என்பது காலம் காலமாக நடைமுறையிலிருந்து வரும் மரபாகும். ஆனால், இவர் தாம் விரும்புவதுபோல 'ஆளுநர் உரை' அமையவேண்டுமென எதிர்பார்க்கிறார். இது அவரது திட்டமிட்ட 'அவை மரபு' மீறலாகும். தொடர்ந்து சட்டப் பேரவையை அவமதிக்கும் அவரது இப்போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.

'தமிழ்த்தாய் வாழ்த்து' என்பது அவை நடவடிக்கைகளின் தொடக்கத்திலும் 'தேசிய கீதம்' என்பது அவை நிறைவிலும் தான் இசைக்கப்படும் என்பது அவருக்குத் தெரிந்த ஒன்று தான். எனினும், தொடக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்கவாதம். இது திமுக அரசுக்கு எதிரான -திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட அவதூறு ஆகும்.

சனாதன சக்திகளிடம் வலுப்பெற்றுள்ள 'திராவிடக் கருத்தியலுக்கு' எதிரான 'ஒவ்வாமையின்' வெளிப்பாடு தான் ஆளுநரின் இத்தகைய செயல் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும். இந்நிலையில், குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள வழக்கமான 'தேநீர் விருந்தில்' விசிக இந்த ஆண்டும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், "குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் தேநீர் விருந்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கவர்னரின் அடாவடிப் போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவர்னர் நடத்தும் குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணித்தே வருகிறது.

ராஜ்பவனை கவர்னர் ஆர்.என்.ரவியின் ஆலோசனையின் பேரில்தான் 'மக்கள் மாளிகை' என்று பெயர் மாற்றம் செய்ததாக பிரதமர் மோடியே அறிவித்திருந்தார். ஆனால், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே அமைந்திருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 'சமக்ர சிக்ஷா அபியான்' நிதியை இன்று வரை நிறுத்தியே வைத்திருக்கிறது. தமிழ்நாடு போராடி பெற்ற பல உரிமைகளையும், கேள்விக்குள்ளாக்கும் வகையிலேயே அவருடைய செயல்பாடும், பேச்சுக்களும் அமைந்திருக்கின்றன. எனவே, இந்த ஆண்டும் கவர்னர் தேநீர் விருந்திற்கு அழைத்துள்ளபோதும், அதை புறக்கணிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் குடியரசு தின விழாவையொட்டி, வரவேற்பு விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழக்கமாக அழைப்பு அனுப்பி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளும், செயல்பாடும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பு அதிகாரத்தை அத்து மீறுவதாகவும் அமைந்துள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் அரசின் கொள்கை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதனை சட்டப் பேரவையில் கவர்னர் ஆற்றும் உரையில் தன் விருப்பப்படி கருத்துக்களை நுழைத்து வாசிக்கிறார். வழிவழியாக பேணப்பட்டு வரும் நல் மரபுகளை உடைத்து களங்கப்படுத்துகிறார். சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றப்படும் சட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து, இறுதியில் அவை காலவதியாகி விட்டதாக தன்னிச்சையாக அறிவிக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்தமாகவும், ஒரு முகமாகவும் எதிர்த்து வருகிற புதிய தேசியக் கல்விக் கொள்கையை, கவர்னர் மாளிகை வழியாக, பல்கலைக் கழக துணை வேந்தர்களை நிர்ப்பந்தித்து வருகிறார். அறிவுசார் கருத்துக்களை நிராகரித்து மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார்.

உலக புகழ் பெற்ற பேரறிவாளர் காரல் மார்க்ஸ், பொதுமறை வழங்கிய வள்ளுவர் உள்ளிட்டோர் படைப்புகளை தவறாக வியாக்கியானப்படுத்தி, அவமதித்து வருகிறார். கவர்னர் என்ற உயர்ந்த பொறுப்புக்கு சற்றும் பொருத்தமற்றவரான ஆர்.என்.ரவியின் அழைப்பையும், அவரது தேநீர் விருந்து விழாவையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் குடியரசு தினத்தன்று வழங்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+