திமுக - அதிமுக இணைய வாய்ப்பில்லை.. இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்கள்.. டிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்கள் என்று திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுகவும், அதிமுகவும் இணைய வாய்ப்பில்லை என்று கூறியுள்ள டிகேஎஸ் இளங்கோவன், எதிர்க்கட்சியாக திமுக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆலோசனை நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனாலும் விஜய் தரப்பால் இன்னும் பெரும்பான்மை எண்ணிக்கையாக 118 என்ற நம்பரை எட்ட முடியவில்லை. இதற்காக விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக கோரி இருக்கிறது.

அதுதொடர்பாக இந்த 3 கட்சிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் திடீரென கடந்த 2 நாட்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க போவதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்ப புதுச்சேரியில் அதிமுகவின் 28 எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திமுக தரப்பில் சில ஆலோசனை நடந்து வருகிறது.
திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்திலும், இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலினுக்கு வழங்கியும் தீர்மானம் போடப்பட்டது.
இதனால் திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்குமா என்ற கேள்விகள் எழுந்தன. கடந்த 2 நாட்களாக இந்த செய்திகள் வட்டமடித்து வரும் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தரப்பிலும் எந்த மறுப்பும் அளிக்கவில்லை. இந்த நிலையில் முதல்முறையாக திமுக தரப்பில் டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாடு அரசியலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கிறோம். அதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைய வாய்ப்பில்லை. தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், எதிர்க்கட்சியாக திமுக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆலோசனை நடந்தது என்று தெரிவித்துள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications