திமுக 'செல்வத்துக்கு' தேவை பணபலம்.. தராவிட்டால் மீண்டும் அதிமுக 'மரகதம்'.. இதுதான் காஞ்சி நிலவரம்!
காஞ்சிபுரத்தில் அதிமுக-திமுக இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: "செல்வத்துக்கிட்ட பணம் இல்லை.. ஆனால் செல்வாக்கு இருக்கு.. அதனால அவருக்கு கண்டிப்பா வெற்றி கிடைக்கும்" என்று சொல்கிறார்கள் காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர்.
காஞ்சிபுரம் ஒரு தனி தொகுதி ஆகும். அதிமுக சார்பாக மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதைய எம்பியும்கூட.
இவருக்கு தொகுதியில் தொண்டர்கள் பலமும் உள்ளது. பண பலமும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக கூட்டணி பலமும் இருக்கிறது. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவின் பார்வையில் இவர் நேரடியாக பட்டதுதான் இவரது வெற்றியின் அடித்தளமே. 2014 தேர்தல் பிரசாரத்தை காஞ்சியில் இருந்துதான் ஜெயலலிதாவே தொடங்கினார். இறுதியில் மரகதம் வெற்றியும் பெற்றார்.

பின்னடைவு
ஆனாலும் இவர் மீது சில புகார்கள் குறிப்பாக அவரது குடும்பம் சார்ந்து சில தனிப்பட்ட முறையில் சர்ச்சைகள் எழுந்து வருவது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறதாம். அதுவும் இல்லாமல், தொகுதியில் கட்சியினருடன் இணக்கமாக இல்லை என்ற புகாரும் உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம் அருகே ‘தொங்கு மேம்பாலம்' அமைக்கும் கோரிக்கை நீண்ட நாளாக தொங்கலில் உள்ளது. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதெல்லாம் சேர்த்து பார்த்தால் இவருக்கு வாய்ப்பு குறைவு என்ற மாயை ஏற்பட்டுள்ளது.

நெருங்கி பழகுவார்
அதே சமயம் திமுக சார்பில் சி. செல்வம் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். எம்.காம், எம்.பில், எல்.எல்.பி படித்தவர். இவர் கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு தோற்று போனவர்தானாம். இருந்தாலும் இந்த முறையும் இவரையே வேட்பாளராக அறிவித்துள்ளது கட்சி. இதற்கு காரணம், மக்களிடம் நெருங்கி பழகும் குணம்தானாம்!

கட்சியின் உதவி
செல்வத்திடம் பணம் இல்லாவிட்டாலும், மக்கள் செல்வாக்கை அதிகமாகவே பெற்றிருக்கிறாராம். எனினும் இவருக்கு கட்சி தலைமை கட்டாயம் பண உதவி செய்தே ஆக வேண்டும் என்றும் அப்படி செய்தால்தான் வெற்றி பெறுவது சாத்தியம் என்றும் திமுக தொண்டர்கள் மனம்விட்டு சொல்கிறார்கள். மேலும் மரகதம் குமரவேல் மேல் உள்ள எதிர்ப்பு வாக்குகளும், சிறுபான்மை ஓட்டுக்களும் செல்வத்துக்கு சாதகமாக விழ வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

காஞ்சி தரிசனம்
அதனால் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற போவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே எழுந்துவிட்டது. பணபலம், அதிகார பலம் உடைய மரகதம் குமரவேல் அல்லது மக்கள் செல்வாக்கு செல்வாக்கு பெற்ற செல்வம்.. இவர்களில் யாருக்கு கிடைக்க போகிறது காஞ்சி தரிசனம்! பொறுத்திருந்து பார்ப்போம்!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications