சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன்".. ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த "தமிழகம்".. புத்திசாலித்தனம்தான்!

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனைத்து கட்சிகளின் முடிவு பாராட்டத்தக்கது

Google Oneindia Tamil News

சென்னை: 4 மாதம் மட்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி என்றும், தமிழகத்தின் தேவைக்கு ஆக்சிஜன், பிறகே வெளி மாநிலங்களுக்கு சப்ளை உள்ளிட்ட அம்சங்களுடன் அனுமதி என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. ஸ்டெர்லைட் ஆலை குறித்த இந்த தீர்மானத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்க்கின்றனர்.

மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை நாடி இருந்தது.. இதையடுத்து, கோர்ட்டும், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாமா என்று தமிழக அரசிடம் பதில் கேட்டிருந்தது.

 குட் நியூஸ்.. இந்தியாவில் சில வாரங்களில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி.. ஒரு டோஸ் மட்டும் போதும் குட் நியூஸ்.. இந்தியாவில் சில வாரங்களில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி.. ஒரு டோஸ் மட்டும் போதும்

மேலும் மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் யோசனையும் வழங்கியது... பதவி விலகிச் சென்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இதே கருத்தைதான் வலியுறுத்தினார்.

 சீமான்

சீமான்

இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடந்தது.. இந்த கூட்டத்தில் 8 கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தன... இறுதியில், ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு மட்டும் இயக்க அனுமதிக்கலாம் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.. இந்த முடிவில், சீமான் தவிர, கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களுமே ஒன்று சேர்ந்து இந்த முடிவுக்கு உடன்பட்டுள்ளனர். இது பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கு 2 காரணங்கள் உள்ளன..

 மக்கள் நலன்

மக்கள் நலன்

இது ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நிலைப்பாடாக பார்க்க தேவையில்லை.. "மக்கள் நலன்" குறிப்பாக தமிழகத்தின் நலன் என்ற அடிப்படையிலேயே இதை அணுக வேண்டி உள்ளது. தமிழக கட்சிகள் அனைத்தும் ஸ்டெர்லைட்டை திறக்க ஒன்றிணைந்து எதிர்த்தால், சுப்ரீம் கோர்ட் "மக்கள் நலன்" கருதி என்று கூறி ஆலையைத் திறக்க உத்தரவிட நேரிடும். அப்படிப்பட்ட சூழல்தான் தற்போது உள்ளது. அது தமிழகத்துக்கு பாதகமாகவும் , ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாகவும் மாறிப் போகும் அபாயமும் உள்ளது.. அதாவது ஸ்டெர்லைட்டுக்கு சாதகமான முடிவுகளை சுப்ரீம் கோர்ட் சொல்ல வாய்ப்புள்ளது.

 விளைவுகள்

விளைவுகள்

அப்படி மட்டும் உத்தரவு ஏதாவது வந்துவிட்டால், அதை யாராலும் மீற முடியாது.. ஆலையை திறந்துதான் ஆக வேண்டும். இது பல்வேறு விளைவுகளையும் நாளைக்கு ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து இப்படி ஒரு முன்யோசனையான முடிவு எடுத்தது புத்திசாலித்தனமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. இதை மக்கள் நலன் சார்ந்துதான் பார்க்க வேண்டி உள்ளது.. பாராட்ட வேண்டி உள்ளது..!

தற்காலிகம்

தற்காலிகம்

அடுத்ததாக, ஸ்டெர்லைட்டை தொடர்ந்து தன் கட்டுக்குள் வைத்திருக்க தமிழக அரசால் முடியும்.. அந்த வகையில், தற்போது தற்காலிகமாக ஆலையை திறந்து விட்டது போலவும் ஆகியுள்ளது, ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதி என்பதால், பிற பிரச்சனைகள் இந்த 4 மாத காலங்களில் எழ வாய்ப்பிருக்காது என்றும் தெரிகிறது, மேலும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் ஒரு முறையான பதிலை தமிழக அரசு தெரிவித்துள்ளது... ஆக, ஒரே கல்லில் 3 விதமான அனுகூலங்களைதான் தமிழக அரசு இன்று முன்னெடுத்துள்ளது.

 எதிர்ப்புகள்

எதிர்ப்புகள்

அதேசமயம், இந்த தீர்மானத்துக்கு ஆங்காங்கே எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.. உயிர்கள் பறிபோகிறது என்பதற்காக, தூத்துக்குடியை மொத்தமாக பலிகொடுத்தால் தவறில்லையா? நீர்நிலைகள் மோசமாக்குவதுதான் உலகம் முழுவதும் உள்ள ஸ்டெர்லைட்டின் வேலையே.. இவங்களாலதான் காற்று மாசு அடைகிறது... காற்று மாசு அடையவேதான் ஸ்டெர்லைட் என்ற விவகாரமே அன்று ஆரம்பமானது.. அந்த ஆலையை மூடியது ஒருவகை ஆறுதல் என்றாலும், மாசடையும் காற்றுக்கு தீர்வு இதுவரை கிட்டவில்லை.

 ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

இன்னைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைதானே பெரிய பிரச்சனை? அதற்கு வேறு மாற்று எதுவுமே இந்தியாவில் இல்லையா? இதையே சாக்காக வைத்து கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும்தான் ஆக்ஸிஜனை தர முடியும், வேற வழியே இல்லை என்ற அளவுக்கு நம்பிக்கையை கொண்டுவந்து விட்டுட்டாங்க.. இதற்கு அரசியல் கட்சிகளும் உடன்பட்டுள்ளனர்.. நாளைக்கு ஏதாவது தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனை ஆகிவிட்டால், எங்கே நம்மை காரணம் சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து, அந்த கட்சிகள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் பேச்சு அடிபடுகிறது.

 கட்டுப்பாடு

கட்டுப்பாடு

எனினும், காற்று, நீர்நிலைகளில் நாளைக்கு வரப்போகும் ஆபத்தை காட்டிலும், இன்று மூச்சுவிட செத்து கொண்டிருக்கும் மனித உயிர்களை காப்பதே, அதிமுக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. அந்த வகையில், மக்கள் நலன் கருதியே இன்று அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கதே.. அதேசமயம், ஸ்டெர்லைட்டை முழுக்க அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இங்கு ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும்.

 தயாரிப்பு

தயாரிப்பு

இங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்துக்கு பெருமளவில் பயன்படுத்துவதையும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு தன் இஷ்டத்திற்கு இங்கு ஆக்சிஜன் தயாரித்து அதை வெளியில் கொண்டு போக அனுமதிக்கவே கூடாது. அப்படி செய்தால் மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடலாம்...!

English summary
DMK and ADMK: Permission to operate Sterlite plant for 4 months, All party resolution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X