நிலக்கரி சுரங்கங்கள்! டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் செயல்! எம்எல்ஏ ராஜா காட்டம்
சென்னை: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் அறிவிப்பு என்பது விவசாயிகளின் வாழ்வாதாரங்களை ஏலம் விடும் செயல் என மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 6ஆவது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில் சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7ஆவது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது.

அதன்படி ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஸா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. அதிலும் தமிழகத்தில் தஞ்சை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.
தஞ்சையில் வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் வடசேரி, மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் நிலக்கரி வெட்டிஎடுக்க திட்டமிட்டுள்ளது. அது போல் கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அம்பாபுரம், நத்தமேடு, கிருஷ்ணபுரம், சின்னநத்தம் உள்ளிட்ட 20 நாடுகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நிலக்கரி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அந்த இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழகத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு மாநில அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை. ஒப்புதலும் பெறவில்லை.
இது போன்ற முக்கியமான விஷயத்தில் மாநில அரசுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது துரதிருஷ்டவசமானது. நிலக்கரி சுரங்க நில ஏலம் விவகாரத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துளளார். இந்த நிலையில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் சார்பில் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
அது போல் தமிழக சட்டசபையில் இன்று மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் ஆகியோர் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது ராஜா பேசுகையில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது என்பது டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் செயல். இமத்திய அரசின் செயல் சட்டத்திற்கு விரோதமானது என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் செய்து வருகிறார்கள். அதிமுக எம்எல்ஏ காமராஜ் பேசுகையில் ஓராண்டாக நடந்த நிலக்கரி சுரங்க டெண்டர் நடைமுறை மாநில அரசுக்கு தெரியாமல் போனது எப்படி என்பது வியப்பாக இருக்கிறது. டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதை தடுக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என காமராஜ் கோரிக்கை விடுத்தார். அது போல் பாமக எம்எல்ஏ ஜி.கே. மணியும் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications