சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாநிலங்களவைத் தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு.. ஒரு இடம் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

சென்னை: மாநிலங்களவை எம்பி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி வரும் ஜூன் 22 ஆம் தேதி காலியாகிறது. தமிழகத்தை பொருத்தவரை திமுக எம்பிக்களான டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, கே ஆர் என் ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன், எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், ஏ விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 22 ஆம் தேதியுடன் முடிகிறது.

இதையடுத்து மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் சட்டசபை உறுப்பினர்களின் விகிதாச்சார அடிப்படையில் பிரிக்கும் போது 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.

 34 எம்எல்ஏக்கள்

34 எம்எல்ஏக்கள்

ஒரு மாநிலங்களவை எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். அதன்படி திமுகவுக்கு 3 இடங்களும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக உள்ளிட்டவற்றை சேர்த்தால் ஒரு இடமும் என மொத்தம் 4 இடம் கிடைக்கும். இந்த 4 இடங்களில் 3 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. ஒரு இடம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தல்

மாநிலங்களவை தேர்தல்

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதில் திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே எம்பிக்களாக இருந்த ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ராஜேஷ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு

ராஜேஷ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு

மேற்கண்ட மூவரில் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த முறை வைத்திலிங்கம், கே பி முனுசாமி ஆகிய இருவர் எம்பி பதவியை ராஜினாமா செய்த போது ராஜேஷ்குமாருக்கும் டாக்டர் கனிமொழி என் வி என் சோமுவுககும் வழங்கப்பட்டது.

ராஜேஷ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு ஏன்?

ராஜேஷ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு ஏன்?

இந்த நிலையில் ராஜினாமா செய்த இருவரின் பதவிக்காலம் 6 மாதங்களில் முடிவடையும் என்பதால் ராஜேஷ்குமாருக்கு அப்போதே திமுக மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ராஜேஷ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெல்டாவுக்கு வாய்ப்பு

டெல்டாவுக்கு வாய்ப்பு

இதன் மூலம் அவர் 6 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார். கொங்கு, டெல்டா, சென்னை வடக்கு என பிரித்து மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பதவிகளில் திமுக கூட்டணி 4 இடங்களில் போட்டியிடுகிறது. அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும்.

English summary
DMK announces candidates for Rajyasabha MP election. DMK contest in 3 seats and 1 seat given to congress. AIADMK contest in 2 seats out of 6
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X