ராஜ்யசபா தேர்தல்- திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டி- மிக நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது!
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 13-ந் தேதி நடைபெறும் ராஜ்யசபா இடைத் தேர்தலில் திமுகவின் வேட்பாளராக எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என்று முதல்வரும் அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு வாய்ப்பு அதிகம் தரப்படுவதில்லை என்ற நீண்டகால ஆதங்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த முகமது ஜான் காலமானார். அதனால் தமிழகத்தில் ஒரு ராஜ்யசபா இடம் காலியாகி இருந்தது. இந்த இடத்துக்கு செப்டம்பர் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தற்போதைய நிலையில் சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் ராஜ்யசபா இடைத்தேர்தலி திமுக எளிதாக வெற்றி பெறும். இதனால் அதிமுக வேட்பாளரை அறிவிக்குமா? என்கிற கேள்வி எழுந்தது.

ராஜ்யசபா வேட்பாளர் அப்துல்லா
இந்த நிலையில் திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் அணியின் இணை செயலாளரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா, ராஜ்யசபா தேர்தலுக்கான திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக வேட்பாளர் அப்துல்லா, ராஜ்யசபா தேர்தலில் வெல்வது உறுதி. இதனால் ராஜ்யசபாவில் திமுகவின் பலம் 8 ஆக உயரும். திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.

திமுகவில் ஆதங்கம்
திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ஒருவித ஆதங்கம் அக்கட்சியில் இருந்தது. திமுகவின் வலிமையான வாக்கு வங்கி முஸ்லிம்கள்தான். அத்துடன் திமுக கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன. இதனால் கூட்டணி கட்சிகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. இதனால் இயல்பாகவே திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்களை புறக்கணிக்கும் நிலை உருவானது. இந்த ஆதங்கத்தை நாம் ராஜ்யசபா இடைத் தேர்தல் தேதி அறிவித்த உடனேயே பதிவு செய்திருந்தோம். (அறிவிச்சாச்சு ராஜ்யசபா இடைத் தேர்தல்: இப்பவாவது திமுக முஸ்லிம் தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? )

தேர்தல்களில் புறக்கணிப்பு
அந்த கட்டுரையில், 2019 லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளை கணக்கு காட்டி திமுக தமது கட்சியின் சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை. பின்னர் ராஜ்யசபா தேர்தலிலும் திமுக மூத்த முஸ்லிம் தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சட்டசபை தேர்தலிலும் கூட திமுக சார்பில் 3 முஸ்லிம்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். ஒருகாலத்தில் 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை திமுக தமது வேட்பாளர்களாக நிறுத்திய வரலாறும் இருக்கிறது. சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையிலாவது முஸ்லிம் தலைவர்களின் இந்த ஆதங்கம் களையப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

கிடைக்காமல் போன வக்பு வாரியம்
குறிப்பாக ஆகக் குறைந்தது வக்பு வாரியத்தின் தலைவர் பதவியாவது திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு தர வேண்டும் என்கிற அழுத்தம் அக்கட்சித் தலைமைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் எம்..அப்துல் ரஹ்மான் முன்னாள் எம்.பி, முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமத் மகள் பாத்திமா முசப்பர் , அதிமுக சார்பில் தமிழ்மகன் உசேன், சன்னி உலாமாக்கள் மற்றும் ஷ்யா உலாமாக்கள் பிரிவில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து அப்துல் ரஹ்மான் வக்பு வாரியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக வக்பு வாரியத் தலைவர் பதவியும் கூட திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு கிடைக்காமல் போனது.

நிறைவேறியது நீண்டகால எதிர்பார்ப்பு
1989-ல் திமுக ஆட்சியை பிடித்த போது முஸ்லிம் லீக் தலைவரான அப்து லத்தீப்-க்கு வக்பு வாரியத் தலைவர் பதவி கிடைத்தது. 1991-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, அக்கட்சியின் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப்புக்கு அந்த பதவியை கொடுத்தது. 1996-ல் திமுக ஆட்சியில் மீண்டும் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் லத்தீப்புக்கே அந்த பதவி கொடுக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திமுக மூத்த முன்னோடி நாகூர் ஹனிபாவுக்கு வக்பு வாரியத் தலைவர் பதவி கிடைத்தது. 2006-ல் திமுக ஆட்சி அமைந்த போதும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஹைதர் அலிக்கும் பின்னர் கவிக்கோ அப்துரல் ரகுமானுக்கும் வக்பு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது என பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் சொந்த கட்சியின் மாநில நிர்வாகியான புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லாவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்திருக்கிறது திமுக. இதனால் திமுகவில் உள்ள முஸ்லிம்களின் நீண்டகால ஆதங்கம் முடிவுக்கு வந்துள்ளது.
-
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தோல்வி உறுதி.. 2001ல் திமுகவே தோற்றிருக்கு.. டிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் -
Election Exclusive: நான் என்ன வைகோவா? இப்பவே அத்துக்கிட்டு போறேன்.. அடம் பிடிக்கும் தவாக வேல்முருகன்! போனை போட்ட தலைகள்! -
விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications