களமிறங்கும் திமுக.. தமிழ்நாடு முழுக்க கண்டன பொதுக்கூட்டங்கள்.. திருவள்ளூரில் பேசும் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் மார்ச் 12 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, "தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுகூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் வரும் மார்ச் 12 ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலையும் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தென் மாநில எம்.பிக்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. எம்பி-க்கள் கூட்டு நடவடிக்கை குழு குறித்து மார்ச் 22ல் ஆலோசனை நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின், தென் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு












Click it and Unblock the Notifications