இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம்.. "5 இடங்கள், 5 பேச்சாளர்கள்".. திமுக வெளியிட்ட பரபர அறிவிப்பு!
சென்னை: இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் 5 இடங்களில் நடக்க இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பில் கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவால் பரிந்துரைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்தி எதிர்ப்பு தீர்மானம்
தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக அக்.14ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை வலியுறுத்தி அக்.18ல் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

திமுக பொதுக்கூட்டம்
பின்னர் இந்தி திணிப்பு தீர்மானம் பற்றிய விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தத் திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திமுக தரப்பில், நவ.4ல் தமிழ்நாடு முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும் உரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

டெல்டாவில் பொதுக்கூட்டம்
இந்த நிலையில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் 5 இடங்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், நவ.4ல் திருச்சி, முசிறி, திருவெறும்பூர் பகுதிகளில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், நவ.5ல் பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் திமுக விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சாளர்கள் யார்?
அதேபோல் திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ், சாமிநாதன், எஸ்எஸ் சிவசங்கர் மற்றும் ஆ.ராசா உரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் என்று திமுக சார்பாக பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக டெல்டா மண்டலத்தில் மட்டும் பொதுக்கூட்டங்களுக்கான தேதி மற்றும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications