அவர் சொல்லித்தான் வேலுமணி மீது ரெய்டு.. ஓபிஎஸ் பின்னாடி ஸ்டாலின் இருக்காரு- சி.வி.சண்முகம் ஒரே போடு!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னால் இருந்து திமுக செயல்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றாம்சாட்டியுள்ளார்.
Recommended Video
ஓபிஎஸ் தூண்டுதலின் பேரில்தான் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என சி.வி.சண்முகம் குற்றாம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதன் விவரம் வருமாறு:

சட்டம் ஒழுங்கு சீர்கேடு
சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஓராண்டு காலம் கடந்து நடைபெற்று வருகிறது. இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், கூட்டு பாலியல் வல்லுறவுகள் நடைபெறுகின்றன. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பழிவாங்கும் திமுக அரசு
அங்கொன்றும், இங்கொன்றுமாக கஞ்சா விற்கப்படுவதாக செய்திகள் வருவது மாறி இன்று இந்தியாவின் கஞ்சா தலைநகராக சென்னை மாறியிருக்கிறது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் ஒழிக்கப்பட்ட லாட்டரி மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கி இருக்கிறது. அதற்கு இந்த ஸ்டாலின் அரசே காரணம். இப்படிப்பட்ட சூழலில் திமுக அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

எஸ்.பி.வேலுமணி
முன்னாள் அமைச்சர், அதிமுகவின் முன்னணி தலைவர் எஸ்.பி.வேலுமணி மீது பொய் வழக்கைப் போட்டு, அவரது வீடு உள்பட கிட்டத்தட்ட 100 இடங்களில் சோதனை செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனையின்போது எஸ்.பி.வேலுமணி ஒரு முக்கிய தூணாக இருந்து இயக்கத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அவரை அச்சுறுத்த வேண்டும், பணிய வைக்க வேண்டும் என்பதற்காக கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது.

ஓபிஎஸ் பின்னால் ஸ்டாலின்
எஸ்.பி.வேலுமணியை அச்சுறுத்தி அதிமுகவை முடக்கலாம் என திமுக அரசு நினைக்கிறது. அதிமுகவுக்கு துரோகம் செய்து வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக அரசு உதவி வருகிறது. ஓபிஎஸ் தூண்டுதலின் பேரில்தான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஓபிஎஸ் பின்னால் இருந்து திமுக செயல்படுகிறது. ஓபிஎஸ் திட்டம் பலிக்காது. வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications