80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு.. அதிமுக ஆதரவு.. பாஜக, திமுக, காங், கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிக்கும் நடைமுறையை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கொரோனா காலகட்டத்தில் முதல்முறையாக பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதே சலுகையை தற்போது நடைபெறவிருக்கும் தமிழகம், புதுவை, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் சென்னை வருகை தந்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் குறித்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 13 லட்சம் பேர் உள்ளனர். இந்த 80 வயது முதியவர்கள் தபால் வாக்கு அளிக்கும் நடைமுறைக்கு அதிமுக ஆதரவு தந்துள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் தபால் வாக்கு தேவையில்லை என பாஜக தெரிவித்துள்ளது.
அது போல் 80 வயதுடையோருக்கு தபால் ஓட்டு நடைமுறைக்கு திமுக, காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தபால் வாக்கு கொடுத்தால் வாக்களிப்பதில் ரகசியம் காக்கப்படாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications