கடைக்கோடி தொண்டனை கண்டுகொள்வதே இல்லை.. குவியும் புகார்கள்.. பதில் சொல்லியே டயர்ட் ஆகும் எம்.பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு கட்சியின் கடைக்கோடித் தொண்டர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்களின் குறைகள் தீர்க்கப்படுவதில்லை என உடன்பிறப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில், விடிவு காலம் பிறக்கும் எனக் காத்திருந்த தி.மு.க தொண்டர்களுக்கு, அக்கட்சியினரால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் வென்ற தி.மு.க பிரமுகர்கள், லோக்கல் உடன்பிறப்புகளின் குறைகளைத் தீர்த்து வைக்காததால், பலரும் சமூக வலைதளங்களில் புகார் வாசிக்கின்றனர்.

பொய் வழக்கு

பொய் வழக்கு

சமீபத்தில் கூட, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.கவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆக இருக்கும் நிலையிலும் இன்னும் ரத்து செய்யவில்லை என தி.மு.க தொண்டர்கள் சிலர் மனம் வெதும்பியிருந்தனர். இதுதொடர்பாக மேலிட கவனத்திற்கு கொண்டு செல்வதாக ட்விட்டரில் ஆக்டிவ்வாக செயல்படும் தி.மு.க நிர்வாகிகள் தொண்டர்களை சமாதானப்படுத்தினர்.

சட்ட உதவிகள்

சட்ட உதவிகள்

மேலும், தி.மு.கவினர் மீது சென்ற அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்குகள், புகார்கள் குறித்து என்னிடம் கூறுங்கள். உறுதியாக அவர்களுக்கு சட்ட உதவி வழங்கப்படும். பொய் வழக்குகளை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நான் உங்களுக்குத் துணை நிற்பேன் என தருமபுரி எம்.பி செந்தில்குமார் ட்விட்டரில் உறுதி அளித்திருந்தார்.

 தொண்டர்கள் வேதனை

தொண்டர்கள் வேதனை

நேற்று கூட தி.மு.க தொண்டர் ஒருவர், "கோவை மருத்துவமனையில் குடலில் இருந்து இந்த நீர் எடுத்து கொடுக்கப்பட்டு 15 நாட்கள் ஆச்சு இன்னும் ரிப்போர்ட் வரலைன்னு சொல்லி அலைய விடுறாங்க. அதுக்குள்ள என் உயிர் போயிரும் போல, கடந்த இரண்டு மாசமா சிகிச்சை பெறுவதற்கு திமு.கவினர் யாரும் உதவவில்லை இதுதான் கடைக்கோடி தொண்டன் நிலைமை" என வேதனையோடு ட்வீட் செய்திருந்தார்.

நிச்சயமாக உதவுவோம்

நிச்சயமாக உதவுவோம்


அந்தப் பதிவை சிலர் தருமபுரி எம்.பியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதற்கு அவர், அந்த ட்வீட்டிலேயே தொடர்பு எண்ணைக் கேட்டு வாங்கி, பாதிக்கப்பட்டவரிடம் பேசியுள்ளார். அவருக்கு அப்பகுதி தி.மு.க நிர்வாகிகள் மூலம் உதவி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இதேபோன்று, தி.மு.க தொண்டர்கள் பலரும், தி.மு.க நிர்வாகிகளை ட்விட்டரில் மென்ஷன் செய்து தங்களது குறைகளையும் புகார்களையும் தெரிவித்து வருகின்றனர். அவர்களது பின்னணியை சரிபார்த்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய தி.மு.க சார்பில் உரிய வசதிகளைச் செய்ய வேண்டும் என தி.மு.க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+