திமுக ராஜ்யசபா வேட்பாளர்.. அந்தியூர் செல்வராஜ் தேர்வுக்காக ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டுகள்
சென்னை: திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜை தேர்வு செய்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டசபையில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 எம்.பி.க்கள் கிடைப்பது உறுதி.

இந்நிலையில் திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ராஜ்யசபா எம்.பி.யாக திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கடந்த முறையே ராஜ்யசபா எம்.பி.யாவார் என எதிர்பார்க்கப்பட்ட என்.ஆர். இளங்கோவுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் அமைச்சரான அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜை ராஜ்யசபா வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அந்தியூர் செல்வராஜை ஸ்டாலின் தேர்வு செய்திருப்பதை அக்கட்சி தொண்டர்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிடப்பட்ட கருத்துகள்:

@rameshibn: அந்தியூர் செல்வராஜ் தேர்வு யாரும் எதிர்பாராத தேர்வு ஸ்டாலினின் துணிச்சலான முடிவு!
@prakashyuva123 : ஒடுக்கப்பட்ட மக்களில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் அருந்ததியர் மக்களின் குரலாய் ஒலிப்பார் அண்ணன் அந்தியூர் செல்வராஜ் அவர்கள்
@nav355: கையை வெட்டி போட்டாலும் இரட்டை இலைக்கு வாக்களிக்கும் மக்கள் அருந்ததியர். MGR காலம் முதலே.. ஆனால், தலைவர் @kalaignar89 அவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்து அழகு பார்த்தார். தற்போது அவர்களுக்கு ராஜ்யசபா பொறுப்பு அளித்துள்ளார் @mkstalin சமூக நீதி .....அந்தியூர் செல்வராஜ்

@Udan_Pirappe: ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் பாதுகாப்பு அரண் என்பதை அந்தியூர் செல்வராஜ் தேர்வு மூலம் நிரூபித்துள்ள தலைவர் தளபதி அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
@muruganandam_g: கழகத்தில் மூத்த முன்னோடிகளுக்கும் உழைத்தால் ஓய்வு இல்லை அரசியல் எதிர்க்காலம் உண்டு என்பதை நிரூபித்துக் காட்டுவதாக இருக்கிறது கழகத் தலைவர் அண்ணன் @mkstalin அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு. வாழ்த்துகள் அண்ணன் #அந்தியூர்_ப_செல்வராஜ் அவர்களுக்கு.
@chnharesh : பட்டியலினத்தவருக்கு திமுக வாய்ப்பு வழங்கி இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. கடந்த முறை சிறுபான்மையினத்தை சேர்ந்த வில்சன் தேர்வானார். இம்முறை அந்தியூர் செல்வராஜ் தலித் சமூகத்தில் இருந்து...
@maninagu312: 73 ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றில் ... அருந்ததியர் சமூகத்தில் இருந்து இரண்டாவது நபராக மாநிலங்களவைக்கு செல்கிறார்.. அந்தியூர் செல்வராஜ். இரண்டு பேருமே திமுக,வை சேர்ந்தவர்கள்.. முதலாமவர் வி.பி.துரைசாமி..












Click it and Unblock the Notifications