வாக்குறுதியை அதிமுக கொடுத்தா என்ன?.. 4 பேருக்கு நல்லதுன்னா திமுக நிறைவேத்தலாமே!
சென்னை: சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்வை சந்தித்து வரும் நிலையில் அதிமுக அறிவித்த தேர்தல் அறிக்கையான ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்ற திட்டத்தை திமுக கையில் எடுக்கலாமே என பரவலாக பேசப்படுகிறது.
தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் நேரத்தில் கதாநாயகன் போன்றதாகும். இதில் அறிவிக்கப்படும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் கவரப்பட்டு ஒரு கட்சிக்கு வாக்களிப்போருக்கு இருக்கிறார்கள். அதனால்தான் தேர்தல் அறிக்கை என்பது பிரதானமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக அதிமுக தேர்தல் அறிக்கைகளில் இரு விஷயங்கள் முக்கியமானதாகும். ஒன்று சிலிண்டர், இன்னொன்று பெட்ரோல் டீசல் விலையுயர்வு.

பெட்ரோல் டீசல் விலை
திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ,5 மற்றும் ரூ 4 முறையே குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது போல் சிலிண்டரை பொருத்தமட்டில் ஒரு சிலிண்டருக்கு ரூ 100 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என அறிவிக்கப்பட்டது.

ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்
இன்றைய காலகட்டத்தில் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்பது முக்கியமானதாகும். மிகவும் பயனுள்ளதாகும். சிலிண்டர் விலையேற்றத்தால் ஏழை எளிய மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் பலர் மண்ணெண்ணெய் அடுப்பிற்கும், விறகு அடுப்பிற்கும் மாறும் சூழல் எழுந்துள்ளது.

திமுக அரசு
பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது இப்போது முடியாது என திமுக அரசு அறிவித்துவிட்டது. சிலிண்டரில் ரூ 100 மானியம் தருவதைவிட இது போல் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என்ற திட்டத்தையாவது திமுக கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். ஆண்டுக்கு 6 இல்லாவிட்டாலும் பாதிக்கு பாதியாவது இலவசமாக கொடுக்கலாம்.
Recommended Video

அம்மா கிளீனிக்
அம்மா உணவகம், அம்மா கிளீனிக் ஆகியவை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தாலும் அதை திமுக தொடர்ந்து நடத்தி வருகிறது. அது போல் தேர்தல் அறிக்கையில் யார் எது சொல்லியிருந்தாலும் அது மக்களுக்கு நன்மை பயக்குமானால் அதை கையில் எடுப்பதில் தவறு ஒன்றும் இல்லையே என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications