10ஆவது படிச்சிட்டு டாக்டரா? கல்வித் தகுதியில் ரீல் சுற்றும் தவெக எம்எல்ஏக்கள்: பகீர் ரிப்போர்ட்!
சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான தவெக எம்எல்ஏக்கள் பொய்யான கல்வித் தகுதியை காட்டியதாக ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் பகீர் தகவல் கிடைத்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்டு வென்ற 108 எம்எல்ஏக்களில் 67 சதவீதம் பேர் பட்டதாரிகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் 6 பேர் பிஎச்டி, 22 பேர் முதுகலை பட்டம், 5 பேர் ஐஐடியில் படித்தவர்கள், 8 பேர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர்கள், 40 பேர் வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தவெக எம்எல்ஏக்கள் தங்களது கல்வித் தகுதியில் மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளதாக Inscoop (இன்ஸ்கூப்) எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் கல்வித் தகுதி, சொத்து மதிப்பு குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அம்மாவின் வீட்டிற்கு வாடகை பணம் கூட செலுத்த முடியாத ஏழையான தன்னை விஜய், அமைச்சராக்கியதாக ராஜ்மோகன் பேட்டி அளித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் சென்னையில் சுமார் ரூ 1.5 கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான சொகுசு வீட்டை வாங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வீடியோவும் வைரலாகி வருகிறது. அது போல் ராஜ்மோகனின் கல்வித் தகுதி குறித்த விவகாரம் சமூகவலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.
இவர் தேர்தல் பிரமாண பத்திரத்தில் 2010ஆம் ஆண்டு வணிக மேலாண்மையும் வணிக மேலாண்மை பட்டயப் படிப்பும் படித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த குறிப்பிட்ட கல்வி நிறுவனத்திற்கு அரசு அங்கீகாரமே இல்லை என்கிறார்கள்.
இந்த நிலையில் இன்ஸ்கூப் நடத்திய ஆய்வில் 10 -க்கும் மேற்பட்ட தவெக எம்எல்ஏக்களின் கல்வித் தகுதியில் மாறுபாடு இருப்பது தெரியவந்தது.
தாம்பரம் தவெக எம்எல்ஏ சரத்குமார் பிபிஏ படித்துள்ள நிலையில் அவர் எம்பிஏ படித்துள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது.
அது போல் தஞ்சை எம்எல்ஏ விஜய் சரவணன் 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளாராம். ஆனால் பிரச்சாரத்தில் தான் பிபிஏ பட்டம் பெற்றதாக பிரச்சாரம் செய்துள்ளாராம். அதுபோல் பிஏ படித்துள்ள ஆவடி எம்எல்ஏ ரமேஷ்குமார் , முனைவர் அல்லது மருத்துவம் பயிலாத நிலையில் டாக்டர் என தனது பெயருக்கு முன்பு போட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் எம்எல்ஏ செல்வம் டிப்ளமோ படித்த நிலையில் அவரும் டாக்டர் என்ற பட்டத்தை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் சட்டப்படிப்பு முடித்துள்ளதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் கூறியிருக்கிறார். தனது பெயருக்கு முன்பு டாக்டர் என போட்டுக் கொண்டுள்ளார்.
குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் பி.காம் படித்த பட்டதாரி என கூறி கொள்கிறார். போளூர் எம்எல்ஏ அபிஷேக் மென்பொறியாளர் என குறிப்பிட்டிருந்த நிலையில் தான் எம்எஸ், எம்பிஏ படித்துள்ளதாக கூறிக் கொள்கிறார்.
அம்பத்தூர் எம்எல்ஏ பாலமுருகன் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். ஆனால் தொழில்நுட்ப பட்டயப் படிப்பு, அதாவது டிப்ளமோ படித்துள்ளதாக தனது விளம்பரங்களில் பயன்படுத்துகிறார். இதனால் 108 தவெக எம்எல்ஏக்களின் படிப்பு விவரங்களை சரி பார்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
70 பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதாக தவெக தெரிவித்திருந்த நிலையில் 8 தொகுதிகளில் மட்டுமே தலித் வேட்பாளர்கள் களம் கண்டு அதில் 4 பேர் மட்டுமே வென்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு?












Click it and Unblock the Notifications