இன்று நடைபெறுவதாக இருந்தது.. திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து
சென்னை: இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் சட்டசபை வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆளுநர் உரையாற்ற தொடங்கியதும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் உள்ள ஸ்டாலின் அறையில் திமுக எம்எல்ஏக்கள், கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அடுத்த கட்ட போராட்டங்கள் எவ்வாறு நடத்தப்படும், என்பது தொடர்பாக பல்வேறு விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதால், இன்று மாலை நடைபெறவிருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications