வாழ்வுரிமை கட்சி கொடி கம்பம் நடுவதை தடுத்த திமுக பிரமுகர்.. ஸ்கெட்ச் போட்டு தீர்த்து கட்டிய கும்பல்!
செங்கல்பட்டு திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்
சென்னை: ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில், தமிழக வாழ்வுரிமை கட்சி கொடி கம்பத்தை நடக்கூடாது என்று திமுக பிரமுகர் ஒருவர் தடுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, அந்த திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளது.
வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்.. இவர் ஒரு திமுக பிரமுகர்... 36 வயதாகிறது.. பெயின்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்து வந்தார்.

கடந்த 1ம் தேதி ராத்திரி 8 மணி அளவில், ஆதனூர் ரோட்டில் உள்ள மெடிக்கல் ஷாப் அருகில் நின்று கொண்டு செல்போனில் பார்த்திபன் பேசி கொண்டிருந்தார்... அப்போது 2 பைக்கில் வந்த 6 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டனர்.
இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.. பின்னர், ஊரப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் 21, புகழ்வாணன் 22, நாவலூர் ஹரிஷ் 21, பிரபு 20, முரளி 23, மண்ணிவாக்கம் பார்த்திபன் 22 ஆகியோர்தான் பார்த்திபனை கொன்றார்கள் என்பது தெரியவந்தது.
ஆனால் இவர்கள் எல்லாருமே தலைமறைவாகிவிடவும் 2 தனிப்படை அமைத்து, வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், இந்த 6 பேரும் ஆதனூர் கூட்ரோட்டில் ஒன்றாக பிடிபட்டனர்.. வெளிமாநிலத்துக்கு தப்பி செல்வதற்காக விடிகாலையில் அந்த கூட் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர்.. இந்த தகவல் அறிந்ததுமே போலீசார் அவர்களை வளைத்து பிடித்து கைது செய்தனர்... ஸ்டேஷனுக்கும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மண்ணிவாக்கம் ஊராட்சி அண்ணாநகர், அம்பேத்கர் நகரில் ஆதிதிராவிடர்கள் நிறைய பேர் வசித்து வருகின்றனர்.. அந்த பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடி கம்பத்தை நடுவதற்காக சிலர் வந்துள்ளனர்.. அவர்களை திமுக பிரமுகர் தடுத்து நிறுத்தி உள்ளார்.
அந்த கட்சி கொடியை தங்கள் பகுதியில் நட கூடாது என்று தகராறு செய்து பார்த்திபன் அவர்களை தடுத்து நிறுத்தினாராம்.. மேலும், அதே பகுதியில் விளையாட்டு திடல் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.. பைக்கில் வேகமாக போனாலும் கண்டித்திருக்கிறார்.. இதனால் இந்த கும்பல் ஆத்திரமடைந்துள்ளது.
அதனால், திமுகவின் பார்த்திபனை கொல்ல 2 முறை முயற்சியும் செய்திருக்கிறார்கள்.. ஆனால் பார்த்திபன் தப்பிவிட்டாராம்... அதனால், சம்பவத்தன்று பார்த்திபனின் கவனத்தை திசை திருப்புவதற்காக, வேறு ஒரு நபரை செட்டப் செய்து பார்த்திபனுடன் போனில் பேச வைத்து, அந்த நேரம் பார்த்து அவரை கொன்றுவிட்டோம் என கைதானவர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர்.
இப்போது 6 பேரும் செங்கல்பட்டு ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டுள்ளனர்.. தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடி கம்பத்தை நடுவதை தடுத்து நிறுத்தியதற்காக திமுக பிரமுகர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்!












Click it and Unblock the Notifications