கிராம சபை கூட்டம் முதல் மாநாடு வரை.. தொடர் திட்டத்துடன் களமிறங்கும் ஸ்டாலின்.. தேர்தல் பரபர!
நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மிக தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
Recommended Video

சென்னை: நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மிக தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
இந்தியா முழுக்க இன்னும் மூன்று மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் தமிழகத்தில் லோக் சபா தேர்தலுடன் சேர்த்து 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க உள்ளது.
இதனால் மற்ற மாநிலங்களில் நடக்க உள்ள தேர்தலை விட தமிழகத்தில் நடக்க உள்ள தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காக திமுக இப்போது மிக தீவிரமாக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

இப்போது கிராம சபா கூட்டம்
இந்த மாபெரும் தேர்தலுக்காக ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 3ம் தேதியே ஸ்டாலின் இதற்காக கிராம சபை கூட்டங்களை நடத்த தொடங்கிவிட்டார். ஏற்கனவே 10க்கும் அதிகமான கிராமங்களுக்கு சென்று ஸ்டாலின் மக்களை சந்தித்து பேசிவிட்டார். இது மட்டுமில்லாமல் இன்னும் திமுக சார்பில் 12,617 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த உள்ளனர்.

மாநாடு நடத்த போகிறார்
ஆனால் இது கிராம சபை கூட்டத்தோடு முடிய போவதில்லை. இதை போலவே பெரிய மாநாடுகளை நடத்தவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். மாவட்ட தலைநகர்களில், முக்கிய நகராட்சிகளில் பெரிய மாநாடுகளை நடத்த ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. பிப்ரவரி 15க்கு பின் இந்த மாநாடுகளை ஸ்டாலின் நடத்துவார் என்று கூறுகிறார்கள்.

எல்லோரும் வருகிறார்கள்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஸ்டாலின் முக்கிய தலைவர்கள் எல்லோரையும் இதில் பேச வைப்பார் என்று கூறுகிறார்கள். 2000ல் நடந்த திமுக மாநாடு போல இந்த மாநாடு நடக்கும் என்று கூறுகிறார்கள். வைகோ தொடங்கி கனிமொழி வரை எல்லோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கிறார்கள். திருச்சி, தஞ்சை, நெல்லை என வரிசையாக இந்த மாநாட்டை நடத்த இருக்கிறார்கள்.

அனைத்திற்கும் தயார்
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமில்லாமல் 20 சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என்று எல்லா தேர்தலையும் ஒன்றாக சந்திக்க திட்டமிட்டே ஸ்டாலின் இப்படி செயல்பட்டு வருவதாக தகவல்கள் வருகிறது. மக்கள் மத்தியில் திமுக இழந்திருக்கும் செல்வாக்கை மீட்கவே இப்படி செய்வதாக கூறப்படுகிறது. இதன் பலன் என்னவென்று தேர்தலுக்கு பின்பே தெரியவரும்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு












Click it and Unblock the Notifications