தவெக மாநில தலைவர் பதவியைவிட! திமுக வட்ட செயலாளர் பதவிதான் கெத்து! செங்கோட்டையனை வம்பிழுத்த மதிவதனி
சென்னை: தவெகவின் மாநிலத் தலைவர் பதவியைவிட திமுகவின் வட்டச் செயலாளர் பதவியும் ஒன்றுதான் என திராவிடர் கழக பேச்சாளர் மதிவதனி பேசியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைந்துள்ள நிலையில் மதிவதனி இவ்வாறு பேசியுள்ளார்.
திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "எதற்கு துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்றால் கருணாநிதியின் பேரன் என்பதற்காகவா? இல்லை, முதல்வரின் மகன் என்பதற்காகவா? அதுவும் இல்லை. துணை முதல்வர் என்பதற்காகவா என்றால் இல்லை, இளைஞர் அணி செயலாளர் என்பதற்காகவா? இல்லை.

எதற்கென்றால் இவரை கொண்டாடக் கொண்டாட இணை எழுச்சியை கவர்கிறார்கள். அதனால் உதயநிதியை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உதயநிதி அண்ணனை அடையாளப்படுத்தியது யார், திமுகவா என்றால் கிடையாது.
தமிழகத்தின் முதல்வரும் கிடையாது, உதயநிதியை அறிமுகப்படுத்தியது நாமா, அதுவும் கிடையாது. கருப்பு, சிகப்பு வேட்டி கட்டிய நம் ஆட்களும் கிடையாது. அவரை யார் அறிமுகப்படுத்தியது என்று கேட்டால், அய்யய்யோ கருணாநிதியுடைய காலம் முடிந்து விட்டது. ஸ்டாலின் வந்தார் இவரோடு அதை முடித்து விடலாம் என்று பார்த்தார்கள். இனப்பற்று உருவாகிற வரை தலைவர்கள் உருவாவார்கள். இன்று உதயநிதியை அடையாளப்படுத்தினார்கள் இனப் பற்றாளர்கள். அதுதான் உதயநிதி வலுவான தலைவராக அறிமுகப்படுத்தியது.
நீங்கள் ஏதாவது நினைத்து புதிதாக ஆரம்பிக்கிற கட்சிக்கு, வேறு எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம். அங்கு வகிக்கக்கூடிய மாநில பொறுப்பாக இருந்தாலும் சரி, திமுகவில் வகிக்கக்கூடிய வட்டச் செயலாளர் பொறுப்பானாலும் சரி, இரண்டும் ஒன்றுதான்.
திமுகவின் பகுதி செயலாளர்களும், வட்டச் செயலாளர்களும், கிளை செயலாளர்களும் தெருத்தெருவாக, வீதி வீதியாகப் போய் வாக்குரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர் என மதிவதனி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தார். அவருக்கு தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் தவெகவின் வளர்ச்சியை பெருக்க செங்கோட்டையன் உதவுவார் என சொல்லப்படுகிறது.
தவெகவில் இணைந்து விட்டு நேற்று சொந்த ஊருக்கு வந்திருந்த செங்கோட்டையனுக்கு தவெகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அது போல் வரும் 2026 ஆம் ஆண்டு விஜய்தான் முதல்வர் என செங்கோட்டையன் நேற்று பேசியது தொண்டர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications