சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அந்த 2 பேர்" இருக்காங்க.. கவலைப்படாதீங்க.. அதையெல்லாம் தூக்கி போடுங்க.. தெம்பூட்டும் இபிஎஸ்!

அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடியார் நம்பிக்கை அளித்துள்ளாராம்

Google Oneindia Tamil News

சென்னை: அதெல்லாம் தூக்கி தூரப்போடுங்க.. நமக்கு 2 பேர் இருக்காங்க.. நம்மை ஜெயிக்க வெச்சுடுவாங்க என்று உற்சாகத்தோடு சொல்லி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி..!

2 நாட்களில் ரிசர்ல்ட் வர போகிறது.. திமுக தரப்பு ஜரூர் காரியங்களில் இறங்கி விட்டது.. ஆனால், அதிமுகவோ, சைலன்ட் மோடில் உள்ளது.. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வரை, உற்சாகமாக இருந்தவர்கள், வாக்குப்பதிவு அன்றே சுணங்கி போய் உள்ளனர்..

வாக்குப்பதிவுக்கு பிறகு டிரான்ஸ்பர் ஆன ஓட்டுக்களை வைத்தும், அதன் நாலாபுறத்தில் இருந்து ரிப்போர்ட்களை வைத்தும் கதிகலங்கி போயுள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. அதற்கேற்றபடி அமைச்சர்கள் ஒருத்தர்கூட பேட்டிகளை எதுவும் தராமல் இருக்கிறார்கள்.

கொரோனா தடுப்பு... குறைகள் தீர்ப்பு... பிறகு தான் எல்லாம்... ஸ்டாலின் முன்னெடுக்கும் 2 அஜெண்டா..! கொரோனா தடுப்பு... குறைகள் தீர்ப்பு... பிறகு தான் எல்லாம்... ஸ்டாலின் முன்னெடுக்கும் 2 அஜெண்டா..!

 எடப்பாடி

எடப்பாடி

ஆனால், அதிமுகவில் எடப்பாடியாரிடம் மட்டும் நம்பிக்கை அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.. இதுபோன்ற சூழலில்தான், எடப்பாடியாருக்கு ஆபரேஷன் ஆகி வீட்டில் ரெஸ்ட்டில் இருந்து வரும் சமயம், சில மூத்த நிர்வாகிகள் போன் போட்டு உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார்கள்.. அப்போது தேர்தல் கணிப்புகள் எல்லாம் எப்படி எப்படியோ வருதே? என்று கலங்கி போய் எடப்பாடியாரிடம் கேட்டார்களாம்.

 2016 தேர்தல்

2016 தேர்தல்

அதற்கு முதல்வரோ, "அதெல்லாத்தையும் தூக்கி தூரமா போடுங்க.. கணிப்புகள் எதையும் கண்டுக்காதீங்க.. அடுத்தும் நாமதான்.. எப்படி 2016-ல் ஒரு மிகப்பெரிய மாற்றம் கடைசி நேரத்தில் நடந்ததோ, இப்போதும் அப்படித்தான் நமக்கும்.. அதுமட்டுமல்ல, நம்மை வெற்றி பெற வைப்பதற்காகவே கமலும், சீமானும் இருக்காங்க.. மநீம, நாம் தமிழர் கட்சிகளின் ஓட்டுக்கள் பிரிவது எல்லாமே நமக்குதான் சாதகமாக இருக்க போகிறது.. அதனால் தைரியமா இருங்க" என்றாராம்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இதைக் கேட்டு அந்த நிர்வாகிகள் மேலும் ஷாக் ஆனார்களாம்.. 50 முதல் 80 சீட்டுக்கள் வரை மட்டுமே இடங்களை வெல்லக்கூடும் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் அதிமுக தலைமையிடம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், இவ்வளவு தெம்பாக சொல்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார்களாம்..

 மெஜாரிட்டி

மெஜாரிட்டி

அதுமட்டுமல்ல, ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காமல், தொங்கு நிலைமை வந்துவிட்டால் என்ன செய்வது என்று அடுத்தக்கட்ட கவலையிலும் முக்கிய நிர்வாகிகள் மூழ்கி விட்டார்களாம். ஒருசிலரோ, மெல்ல திமுக பக்கம் காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனராம்.. "நட்பு" அடிப்படையில் போனை போட்டு நலம் விசாரித்து கொண்டும் இருக்கிறார்களாம்.

English summary
DMK: CM Edapadi Palanisamy is confident that the ADMK will win
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X