அசைந்து கொடுக்காத போட்டி வேட்பாளர்கள்! தர்மசங்கடத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள்! அடுத்தது என்ன?
சென்னை: நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
அவ்வாறு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைக்கும் விவகாரத்தில் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பேச்சு நிர்வாகிகள் மத்தியில் எடுபடவில்லை என்பது தான் இப்போது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஒரு புறம் தலைமை கொடுக்கும் அழுத்தம் மற்றொருபுறம் போட்டி வேட்பாளர்களின் பிடிவாதம் என திமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மறைமுகத் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில் மறைமுகத் தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 3-ம் தேதி நண்பகல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியல் வெளியானது முதலே திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் பெரும் தலைவலி உண்டானது. பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தவர்கள் மாவட்டச் செயலாளர்களிடம் குமுறத் தொடங்கினர்.

மார்ச் 4
இதையடுத்து வெள்ளிக்கிழமை மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் நானா நீயா என ஒரு கை பார்த்துவிடுவோம் என திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டிவேட்பாளர்கள் பல இடங்களில் களமிறங்கினர். உடுமலைப்பேட்டை, தேனி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இன்னும் பல நகராட்சிகள் பேரூராட்சிகளில் போட்டி வேட்பாளர்கள் வெற்றிபெற்று லோக்கலில் தங்களுக்குள்ள செல்வாக்கை நிருபித்தனர்.

ராஜினாமா விவகாரம்
இதனிடையே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்களில் ஒரு சிலர் மட்டும் ராஜினாமா செய்து வருகின்றனர். ஆனால் திமுகவிலேயே அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற போட்டி வேட்பாளர்கள் பலர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை.

தர்ம சங்கடம்
இது தொடர்பாக அவர்களிடம் திமுக மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக எந்த ரெஸ்பான்சும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்த போது கட்சிக்காக செலவு செய்த தொகையையும், உழைப்பையும் சுட்டிக்காட்டி போட்டி வேட்பாளர்கள் நியாயம் கேட்பதை ஏற்பதா இல்லை தலைமையின் அறிவுறுத்தல்படி ராஜினாமா செய்ய வைப்பதா என தர்ம சங்கடமான சூழலுக்கு மாவட்டச் செயலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பஞ்சாயத்து
கடலூர், திருப்பூர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் இது தொடர்பான பஞ்சாயத்து அதிகம் உள்ளது. இதனால் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து வெற்றிபெற்ற அதே திமுகவை சேர்ந்த போட்டி வேட்பாளர்களின் நிலை என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications