மிஸ்டர் ஆளுநர்! உங்க டூட்டியை முதலில் பாருங்க சார்.. 'ஜாதிய கொடுமை' கருத்துக்கு திமுக பொளேர் பதில்!
சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிய கொடுமைகள் அதிகமாக நடைபெறுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்ததற்கு திமுக கடும் பதிலடி கொடுத்துள்ளது.
தஞ்சாவூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் ரவி அந்நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிக ஜாதிய பாகுபாடுகள், வன்முறைகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஜாதிய பாகுபாடு காட்டப்படுகிறது.

மேலும் தலித்துகள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது, குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது ஆகிய நிகழ்வுகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பேச்சில் சுட்டிக்காட்டி இருந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் விவாதங்களையும் உருவாக்கி உள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது: வட இந்தியாவில் தலித்துகள் மீது சிறுநீர் கழிக்கிற ஜாதிய கொடுமை நிகழ்கிறது. ஆனால் அதனை யாருமே கேள்வி கேட்பது கிடையாது. இதுதான் ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமூக நீதி கோட்பாடு போல.. ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படும் போது ஆளுநர் ரவி என்ன மாதிரியாக எதிர்வினையாற்றுகிறார்? யாருக்கும் தெரியாது.

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு ஆளுநராக செயல்படாமல் இருக்கிறார். ஒரு ஆளுநரின் கடமை என்ன? மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது என்பதுதான். ஆனால் அந்த கடமையை செய்யாமல் ஆர்.எஸ்.எஸ்.க்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications