தயாராகும் டெல்டா திமுகவினர்.. தேதி குறித்த ஸ்டாலின்.. கனிமொழி தலைமையில் நடக்கப்போகும் மெகா சம்பவம்!
சென்னை: "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடக்கும் இந்த மாநாடு கனிமொழி தலைமையில், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலையில் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" மகளிரணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

முகவின் 13 மாவட்டங்களில் இருந்து 39 சட்டசபைத் தொகுதிகளுக்கு உட்பட 1.5 லட்சம் மகளிர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு 6 மாவட்டங்களில் இருந்து பூத் வாரியாக 10 முதல் 15 பெண் நிர்வாகிகள் பங்கேற்றனர். மொத்தமாக 1.5 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு அவர்களுக்கு மிக்சர், இனிப்பு, குளிர்பானம், தண்ணீர் பாட்டில், ரஸ்க் அடங்கிய திமுகவின் சிற்றுண்டி தொகுதி பைகள் அளிக்கப்பட்டன.
திமுக மகளிர் அணியின் மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஏற்கனவே திமுக ஆட்சி அமைந்த நாள் முதலே விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் நான் முதல்வன் திட்டம், கல்விக்கான திட்டங்களிலும் அதிகளவில் மகளிர் பயன் அடைந்துள்ளனர்.
விரைவில் இலவச லேப்டாப் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனால் இந்த திட்டங்களை மகளிருக்காக திமுக செயல்படுத்தியதை கொண்டு செல்லும் வகையில் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்கள் திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றிருந்தது.
அதேபோல் சிறுபான்மை மக்கள் அதிகளவில் டெல்டா மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். இதனால் மீண்டும் டெல்டாவை குறி வைத்து திமுக மகளிர் அணி மாநாட்டை நடத்த உள்ளது. இந்த மாநாடு ஜனவரி 19ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் மாலை 4 மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்பி கனிமொழி தலைமையில் அமைச்சர் கேஎன் நேரு முன்னிலையில் நடக்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். இதனால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையடுத்து தென் மாவட்டங்களில் மகளிர் அணி மற்றும் இளைஞரணி மாநாடு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications