‘ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி’ - உதாரணத்துடன் புட்டு புட்டு வைத்த செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக 23 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்து களத்தில் முந்திக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நடத்தி வருகிறது. இந்நிலையில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை வழங்காத காலம் மாறி, திமுக இப்போது கூட்டணி கட்சிகளுக்கு சாதகமான தொகுதிகளை வழங்கி, சவால் மிகுந்த தொகுதிகளில் அவர்களே நேரடியாக இறங்குவதாக ஸ்டாலினை செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் பேசி முடித்த பிறகு எங்களுக்கான விருப்ப தொகுதிகளை கேட்டு பெறுவோம். மிக விரைவில் எங்கள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வருகிறார்.

இந்தியா கூட்டணி
எங்கள் தேசிய தலைவர் மல்லிகார்ஜீனா கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோரும் வருகிறார்கள். அன்னை சோனியா காந்திக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எப்போது வேண்டுமானாலும் வருவார்கள். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி கடை திறந்து வைத்துள்ளனர். யாரும் வரத்தான் மறுக்கிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது மூழ்கும் கூட்டணி என்பதை ஏற்கனவே கூறியுள்ளேன். அதில் யார் ஏறினாலும் மூழ்கிவிடுவார்கள். அதனால் அங்கு யாரும் செல்வதில்லை. இங்கு எல்லோரும் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும், தமிழ்நாட்டை தலை நிமிர வைக்க வேண்டும். என்று எங்களுடன் வரிசையாக அணி வகுத்து நிற்கிறார்கள். அதுதான் எங்களுக்குள் உள்ள வித்தியாசம்.
ஸ்டாலினின் அணுகுமுறை
தமிழ்நாடு மக்கள் தீர்மானித்துவிட்டனர். 210 தொகுதிகளுக்கு மேல் எங்களின் திமுக இந்தியா கூட்டணி வெற்றி பெறும். முதலமைச்சரின் தேர்தல் அனுபவம் எனக்கு தெரியும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட்களுக்கு கோவை தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை போட்டியிட்டார். நாங்கள் திண்டுக்கல் கேட்டோம்.
திமுகவுக்கும் திண்டுக்கலுக்கு ஓகே சொல்லிவிட்டனர். ஆனால் அண்ணாமலையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் என முடிவு செய்தனர். எனக்கு ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார். கூட்டணி கட்சிகளுக்கு பாரம் கொடுக்க விடக்கூடாது என்று திமுகவே நேரடியாக பாரத்தை ஏற்றுக் கொண்டது. அங்கு முன்னாள் மேயர் ராஜ்குமார் என்பவரை வேட்பாளராக்கினார்கள்.
படுத்துக் கொண்டே எளிதாக வெற்றி பெறும் திண்டுக்கல் தொகுதியை கம்யூனிஸ்ட்டுக்கு கொடுத்தனர். இதுதான் முதலமைச்சரின் வரலாறு. அவரின் பார்வையை நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். முன்பெல்லாம் வெற்றி பெறும் தொகுதிகளை கொடுப்பதற்கு தயங்குவார்கள். இப்போது அப்படியில்லை. பிரச்சனை உள்ள இடங்களில் ஸ்டாலினே சமாளிக்க தயாராக உள்ளார்" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications