தொடர்ந்து 4 தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி.. பெரும் ஒருங்கிணைப்பாளர்: நிரூபித்த ஸ்டாலின்
சென்னை: முரண்டு பிடித்து வந்த காங்கிரசை கச்சிதமாக டீல் செய்த ஸ்டாலின் கூட்டணியை உறுதி செய்துள்ளார். 41 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் கட்சியை 28 +1 என்ற டீலுக்குள் கொண்டு வந்துள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து 4 வது தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் தான் ஒரு மாஸ்டர் என்பதை ஸ்டாலின் மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது. திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது இந்த கூட்டணி ஏற்பட்டது.

பீகாரில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி
அப்போதில் இருந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், லோக்சபா தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன. திமுகவின் நம்பகமான கூட்டணியாகவும் உற்ற தோழமை கட்சியாகவும் காங்கிரஸ் விளங்கி வந்த நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தொகுதி பங்கீட்டில் இருகட்சிகள் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
பீகாரில் படும் தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. கடைசி கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றதால் அங்கு போதிய எண்ணிக்கையை பெற முடியவில்லை என்பதை உணர்ந்த காங்கிரஸ், தமிழகத்தில் அந்த தவறை செய்யக்கூடாது என்று கருதி கடந்த டிசம்பர் மாதமே கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தது.
கூடுதல் தொகுதியை கேட்ட காங்கிரஸ்
ஆனால், திமுக தாமதம் செய்ததால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்தது. காங்கிரஸ் கட்சி இந்த அதிருப்தியை வெளிப்படையாகவே காட்டிய நிலயில், திமுக இந்த மாதம் துவக்கத்தில் கூட்டணி பேச குழு அமைத்தது. இதையடுத்து, இரு கட்சிகள் இடையேயும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது.
காங்கிரஸ் கட்சி முடிந்தவரை அழுத்தம் கொடுத்து கூடுதல் தொகுதிகளை பெற முயற்சித்தது. இதை உணர்ந்த ஸ்டாலினோ, காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கையை கொடுக்க முடியாது என்றும் அதற்கான காரணத்தையும் கூறினார்.
தேமுதிக, மநீமவை காரணம் காட்டி..
தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சிக்கு கேட்கும் எண்ணிக்கையை கொடுக்க முடியாது என்றும் நீங்கள் கேட்கும் தொகுதியை கொடுக்க மனம் உள்ளது.. ஆனால் அதற்கான இடங்கள் இல்லை என்று ஸ்டாலின் கூறினார்.
காங்கிரஸ் - திமுக இடையேயான கூட்டணியால் கடந்த ஒரு வார காலமாக பரபரப்புக்கு செய்திகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்ற நிலையில், இன்று கச்சிதமாக கூட்டணியை உறுதி செய்துள்ளார் ஸ்டாலின்.
கச்சிதமாக காய் நகர்த்திய ஸ்டாலின்
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் 4 வது முறையாக திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.
கூட்டணி உடையலாம் என்று அரசியல் நோக்கர்கள் பலரும் கடந்த சில நாட்களாக கணித்த நிலையில், ஸ்டாலின் கச்சிதமாக காய் நகர்த்தி பெரும் ஒருங்கிணைப்பாளர் என்பதை நிரூபிணம் செய்துள்ளார்.
ஏனெனில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தாலோ அல்லது தவெகவுடன் கூட்டணி வைத்தாலோ காங்கிரசில் பிளவு ஏற்படும் என்றும், இது எப்படி பார்த்தாலும் காங்கிரசுக்கு தான் சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தே டெல்லி தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications