காங்கிரஸ்க்கு 36 தொகுதிகள்? ராகுலுடன் ஒரு மணி நேரம் ஆலோசித்த கனிமொழி.. டெல்லியில் நடந்தது என்ன?
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளது. இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். சுமார் ஒரு மணி வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. ஆனால் திமுக கூட்டணி இணக்கமாக இருந்தாலும், இன்னும் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை குழுவை கூட அமைக்கவில்லை.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு என்ற குரல்களை எழுப்பினர். இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஜனவரி 17ஆம் தேதி டெல்லிக்கு காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் அழைக்கப்பட்டனர். ராகுல் காந்தி, கார்கே, வேணுகோபால் உள்ளிட்டோர் ஒவ்வொரு நிர்வாகியுடனும் தனித்தனியாக ஆலோசித்தனர்.
இறுதியாக கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசுகையில், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக திமுகவின் பதிலுக்கு 2 மாதங்களாக காத்திருக்கிறோம். கூட்டணி பேச்சு இதுவரை தொடங்கப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது.
திமுக தரப்பில் இருந்து ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை என்று கூறி இருந்தார். இதனால் திமுக வேண்டுமென்றே தாமதம் செய்வதாக சிலர் குற்றம்சாட்ட தொடங்கினர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக இன்று தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை திமுக எம்பி கனிமொழி சந்தித்தார். டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
ஏற்கனவே செல்வப்பெருந்தகை திமுகவினர் நேரடியாக டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி வருவதாக கூறி இருந்தார். அதன்படி கனிமொழி மூலமாக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியுடன் பேச்ச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி தரப்பில் 36 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்ய சபா சீட் டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி 41 முதல் 45 சட்டமன்றத் தொகுதிகளைக் கோருவதாகவும், இறுதியில் 38 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ளக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021-ல் திமுக காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்கியது, ஆனால் இப்போது அந்த எண்ணிக்கையை விட கூடுதலாக 2-5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக ரெடியாக இருக்கிறது












Click it and Unblock the Notifications