திருச்சி தொகுதி வேணும்.. இல்லைன்னா.. திமுக எடுத்த முடிவு.. கிடுகிடுத்து போன பெரிய தலை.. என்னாச்சு?
சென்னை: திமுக -காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிகளை அடையாளம் காண்வதில் இழுபறி நீடிக்கிறது. ராகுல் யாத்திரை நிறைவு நாளில் கலந்து கொள்ள மும்பை சென்றுள்ளார் ஸ்டாலின். அப்போது, ராகுல் காந்தியிடம் தொகுதிகள் குறித்து திமுகவின் முடிவை தெரிவித்து சம்மதம் பெறவிருக் கிறார் ஸ்டாலின் என்கின்றன திமுக தகல்கள்.
இன்று காங்கிரஸ் எம்வி ராகுல்காந்தியின் நடைபயணம் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்திய கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காங்கிரஸ் எம்வி ராகுல்காந்தியின் நடைபயணம் நிறைவு பெறுகிறது. 'நியாய சங்கல்ப் பாதயாத்ரா' என்ற பெயரில் நடைபெறும் யாத்திரை நிறைவு பெறுகிறது. மும்பையில் மணி பவன் முதல் ஆகஸ்டு கிராந்தி மைதானம் வரை இறுதி நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். மாலை 5 மணி அளவில் மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நிறைவு விழா நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்திய கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை திரும்புகிறார்: மும்பையிலிருந்து இன்று இரவே சென்னை திரும்புகிறார். அனேகமாக இன்று அல்லது நாளை காங்கிரசுக்கான தொகுதிகள் கையொப்பம் ஆகும் என சொல்லப்படுகிறது. காங்கிரசுக்கு திருச்சியை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. ஆனால், திருச்சியை விட்டுவிடக்கூடாது என மல்லிகா ஜுனகார்கேவிடமும், கே.சி.வேணுகோபாலிடமும் தொடர்ச்சியாக வலியு றுத்தி வருகிறார் திருநாவுக்கரசு.
இந்த நிலையில், திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காது என்றும், இந்த முறை தனக்கு சீட் இல்லை என்றும், தனக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை இருக்கிறார் என்றும் உறுதியாக தெரிந்து கொண்ட திருநாவுக்கரசு, நேற்று அவசரமாக புறப்பட்டு டெல்லிக்கு பறந்துள்ளார். ராகுல் மற்றும் சோனியாவிடம் நெருக்கமாக இருக்கும் கேரளா முக்கியஸ்தர் ஒருவரை நெருங்கியிருக்கிறார் திருநாவுக்கரசு.
அவரிடம், திருச்சி தொகுதியை எனக்கு பெற்றுத் தர வேண்டும். திருச்சி தொகுதி காங்கிரசுக்கு கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் பொது தொகுதிகளில் ஒன்றை எனக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். எந்த தொகுதியில் நின்றாலும் என்னால் ஜெயிக்க முடியும் என்று சொல்லியிருக்கும் திருநாவுக்கரசு, எனக்கு சீட் ஒதுக்கப்படவில்லையெனில் அரசியல் ரீதியாக ஒரு முடிவை எடுத்தாக வேண்டும்.
அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கட்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் ஒரு முடிவை நான் எடுக்க வேண்டியதிருக்கும். திருச்சி தொகுதி கிடைக்கவில்லை எனில், எங்கள் கட்சிக்கு வாருங்கள் அதே தொகுதியை நாங்கள் உங்களுக்குத் தருகிறேன் என அதிமுக என்னை அணுகியுள்ளது என்பதையும் அந்த முக்கியஸ்தரிடம் சொல்லியிருக்கிறார். அதாவது, ராகுலுக்கும் சோனியாவுக்கும் இதை தெரிவிக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில்தான் இதனை சொல்லியிருக்கிறாராம் திருநாவுக்கரசு.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications