பெரியாருக்கு சிலை வைப்பது பெருமைக்கு எருமை மேய்ப்பதா? சீமான் மீது திமுக, சிபிஎம், வி.சி.க. பாய்ச்சல்
சென்னை: தந்தை பெரியாருக்கு சிலை எதற்கு என பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) முன்மொழிவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிமொழிகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக சாடியுள்ளார். தந்தை பெரியாருக்கு சிலை வைப்பதை பெருமைக்கு எருமை மேய்க்கும் வேலை என கூறியிருந்தார் சீமான்.
Recommended Video
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் திருச்சியில் ரூ100 கோடியில் 135 அடி உயரத்தில் பெரியாருக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்திருந்தார்.
ஆனால் பெரியாருக்கு ரூ100 கோடி செலவில் அரசு பணத்தில் சிலை வைப்பதா? என்கிற எதிர்ப்பும் சிலரிடம் இருந்து எழுந்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

பெருமைக்கு எருமை மேய்ப்பதா?
அப்போது பேசிய சீமான், பெரியாருக்கு ரூ100 கோடி மதிப்பில் 135 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். பெரியார் பொதுமக்களிடம் நிதி சேகரித்து பள்ளி, கல்லூரிகளை உருவாக்கினார். இன்று அவை யாரிடம் இருக்கிறது உங்களுக்கு தெரியும். மக்களின் வறுமையை போக்க பாடுபட்ட சீர்திருத்தவாதி பெரியாருக்கு ரூ100 கோடியில் எதற்கு சிலை? பெரியாருக்கு தமிழகத்தில் அளாவுக்கு அதிகமாகவே சிலைகல் வைக்கப்பட்டுள்ளன. அங்கே வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மோடி சிலை அமைப்பதற்கும் நீங்கள் பெரியாருக்கு சிலை அமைப்பதற்கும் என்ன வித்தியாசம்? என்ன தேவை? கிராமங்களில் சொல்வார்களே.. பெருமைக்கு எருமை மேய்ப்பது போலத்தான் இருக்கு. இதுக்கு பேரு பணக்கொழுப்பு. அதிகாரத் திமிர். இதனை ஐயா பெரியார் இருந்தால் விரும்புவாரா? என கேட்க விரும்புகிறேன். பெரியார் தன் கைத்தடியாலேயே விரட்டி விரட்டி அடித்திருப்பார். இதையெல்லாம் பேசினால் ஆ... திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார்கள்.. திராவிடம் என்றால் எரிகிறது என்பார்கள்.. திராவிடம் என்றால் எரியத்தான் செய்யும்.. வேறு என்ன செய்யும்? உங்களுக்குத்தானே எரியும் என ஆவேசமாக கூறினார்.

சீமான் பொய் பிரசாரம்
சீமானின் இந்த கருத்துக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பெரியாரிய ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ராஜீவ்காந்தி, நூற்றாண்டு கால அடிமைத்தனம் உடைத்த தமிழர் தந்தை பெரியாருக்கு 100 கோடியில் அல்ல 1000 கோடியில் கூட அரசாங்கம் சிலை வைக்கலாம்! ஆனால் Mr @SeemanOfficial இப்போது சிலை வைப்பது அரசாங்கம் இல்லை "பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்" பொய் பிரச்சாரம் செய்யாதீர்! முடிந்தால் நிதி தாரீர்!! என கிண்டலடித்துள்ளார். இவரது பதிவில் பின்னூட்டம் போட்டுள்ள @RajaM05349205, திராவிட கழகம்தான் கட்டுது மக்கள் பணத்தில் கட்டபடவில்லை நூலகம் பூங்கா ஒருங்கினைந்துதான் சிலை வைக்கப்படுகிறது என கூறியுள்ளார். @maniarinban என்பவர், தந்தை பெரியாரின் 143 அடி உயர சிலை அரசு வரிப்பணத்தில் வைக்கப்பட போவதில்லை. அது பெரியார் பகுத்தறிவு அமைப்புகள் தங்கள் சொந்த செலவில் அமைக்கப்போகும் சிலை. இதை மக்கள் வரிப்பணத்தில் மோடி வைத்த படேல் சிலையுடன் ஒப்பிட்டு பச்சைப் பொய் பேசுகிறார் சீமான் என விமர்சித்துள்ளார்.

பாஜகவின் குரல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது ட்விட்டர் பக்கத்தில், பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சொல்லும் பாஜகவின் @HRajaBJP வுக்கும், பெரியாருக்கு சிலை எதற்கு என பாஜக முன் மொழிவதை வழிமொழியும் இயக்குனர் @SeemanOfficialக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார். @isai_ என்ற நெட்டிசன், பெரியார் சிலையை திருச்சியில் அமைப்பது "பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்". தமிழ்நாட்டு அரசு அதற்கான அனுமதியை மட்டுமே வழங்கியிருக்கிறது! சீமான் போன்ற பொய்யை கழியும் எருமைகளை மேய்ப்பதில் பெருமை ஒன்றும் இல்லை பெரியார் சிலை சிறப்பாக அமையும். பெரியாரியலாளர்களுக்கு! என கூறியிருக்கிறார்.

சி.பி.எம். கடும் எதிர்ப்பு
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருணன் @Arunan22, பெரியாருக்கு பெரும் சிலை வைப்பது கண்டு சீமானுக்கு எவ்வளவு ஆத்திரம்! இதிலேதான் சங்கிகளுக்கும் சீமான்களுக்கும் இடையிலான கூட்டு பளிச்செனத் தெரிகிறது என சாடியுள்ளார். @PBascalஎன்ற நெட்டிசன், மகன் காதணி விழாவுக்கு லட்சக்கணக்கான செலவில் 108 கிடாய்களை வெட்டியது பெருமைக்கு எருமை மேய்க்கிற கதையில்லையா @SeemanOfficial, பிகு - பெரியார் சிலை செலவை அரசு செய்யவில்லை , பெரியார் கூட்டமைப்பு தான் செய்கிறது.... என பதிவிட்டுள்ளார்.

சீமான் சொல்வது சரி
இன்னொரு பக்கம் சீமானுக்கு ஆதரவாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. @AbubackerOfficl என்ற நெட்டிசன், பெரியாருக்கு 135 அடி சிலை வைத்து பிம்ப அரசியல் செய்ய முற்படும் இவர்கள் தான்... அன்று பெரியார் மறைவிற்கு இரங்கல் செலுத்தக் கூட அனுமதிக்காதவர்கள்!! வரலாற்றில் அம்பலப்பட்டு நிற்கிறீர்கள் #திராவிடர்களே நூல் : புலவர் கலியபெருமாள் தன்வரலாறு என கூறியுள்ளார். @gunasundari250 என்ற நெட்டிசன், அரசும் மக்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிற இந்த நேரத்தில் 100 கோடி செலவில் தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது தேவையில்லாதது. தந்தை பெரியார் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பார். இந்த விஷயத்தில் @SeemanOfficial சொன்னதை வரவேற்கிறேன் என்கிறார். @SDevan93 என்ற பதிவர், தமிழனின் பெருமையாம், தஞ்சை கோவில் கரு விமானத்தை விட, பெரியதாய் தெரிய வேண்டுமென ஆரியம் எழுப்பியதே சிறி ரங்கம் வாயில் கோபுரம். அதையே தான் த்ராவிடம், பெரியார் சிலையை வள்ளுவன் பெரும்பாட்டனின் சிலை உயரத்தை விட அதிகம் வைக்க பார்க்கிறது.ஆரியம்=த்ராவிடம்<�தமிழம் என விமர்சித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications