"மன்னிப்பு கேளுங்க அண்ணாமலை?" கத்தியில் குத்துவது ராணுவ வீரர் மச்சானா? திகில் வீடியோ வெளியிட்ட திமுக
சென்னை: திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் தனது மனைவி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக வீடியோ வெளியிட்டதை அடுத்து அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சித்த நிலையில், ராணுவ வீரரின் மைத்துனர் கடை உரிமையாளரை தாக்கியதாக வீடியோவை வெளியிட்டு திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய ராணுவத்தின் ஹவில்தாராக பணியாற்றி வருபவர் பிரபாகரன். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த படவேடுவை சேர்ந்த இவர் காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட இவர், தன்னுடைய மனைவியை 120 பேர் சேர்ந்து அரை நிர்வானமாக்கி தாக்கியதாக குற்றம்சாட்டி இருந்தார்.

தமிழ்நாடு அறநிலையத்துக்கு சொந்தமான கோயில் இடத்தில் உள்ள தன்னுடைய மனைவியின் கடையை அடித்து நொறுக்கி, மனைவியை தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஜிபிக்கு அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் திரு பிரபாகரன் அவர்கள், தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது, 120க்கும் மேற்பட்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியிட்டுள்ள காணொளி கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது காவல்துறையின் விளக்கம். இந்தத் திறனற்ற திமுக அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரணப் பொதுமக்களுக்கான அரசாக இல்லை.
இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ வீரரை அடித்துக் கொல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், கடுமையான நடவடிக்கை இன்றி, மிகச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்கிறது. தங்கள் சுக துக்கங்களைத் தொலைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, நன்றி கொன்ற அரசாக இருக்கிறது திமுக அரசு.
காஷ்மீர் எல்லையில் பணியில் உள்ள ராணுவ வீரர் ஹவில்தார் திரு பிரபாகரன் அவர்களது மனைவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, இந்தக் கையாலாகாத திமுக அரசு உணர வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரின் மைத்துனர் இடத்தின் உரிமையாளரை கத்தியால் குத்தியதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. திமுகவினரும் ட்விட்டரில் இதனை பதிவிட்டு அண்ணாமலையை விமர்சித்து வருகிறார்கள்.
சொந்த தகராறுல கூட எல்லையில் ராணுவ வீரர்கள்னு தூக்கிட்டு வர வெக்கமா இல்லையா அண்ணாமலை. காலைல வதந்தி பரப்புனீங்களே இப்போ என்ன சொல்ல போறீங்க? @annamalai_k @NTR_NationFirst#பதில்சொல்லுசங்கி pic.twitter.com/h4xNc0NSyB
— Dr.S.A.S. Hafeezullah (@DrHafeezDMKoffl) June 11, 2023
இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் திமுக செய்தித் தொடர்பு மாநில துணை செயலாளர் மருத்துவர் சையது ஹபீசுல்லா, "சொந்த தகராறுல கூட எல்லையில் ராணுவ வீரர்கள்னு தூக்கிட்டு வர வெக்கமா இல்லையா அண்ணாமலை. காலைல வதந்தி பரப்புனீங்களே இப்போ என்ன சொல்ல போறீங்க?
இடத்துக்கு சொந்தக்காரன்கிட்ட இடத்தை கொடுக்காம ஃப்ராடு பண்ணி கத்தியால குத்துன ஒரு கிரிமினல் கும்பலுக்காக குதிச்ச ஒரு சங்கி பொத்திட்டு போன தருணம். பாஜகவில சேத்துக்கோங்கயா அவனுகள கரெக்டா இருப்பானுக. வதந்தி பரப்புனதுக்கு எப்போ மன்னிப்பு கேக்க போறீங்க." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications