மார்க் 70.. திமுக லிஸ்ட் எடுத்த தொகுதிகள்! அங்கே மட்டும் தீவிரமாக வேலை பார்க்க முடிவு! ஏன் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்.. திமுக சுமார் 70 இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறதாம். இந்த 70 இடங்களில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறதாம்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் பிப்ரவரி கடைசி வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேற்கு வங்க SIR இறுதி லிஸ்ட் பிப்ரவரி 28ம் தேதி வரலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் அதற்கு மறுநாள் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். பெரும்பாலும் தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக இந்த தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதை விட களப்பணி செய்வதை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
திமுக களப்பணி
திமுக கிரவுண்டில் கடுமையான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்தடுத்து மகளிரணி கூட்டம், இளைஞரணி கூட்டம், திமுக செயல் வீரர்கள் கூட்டம், நேற்று பூத் நிர்வாகிகள் கூட்டம் என்று வரிசையாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மற்ற கட்சிகள் தேர்தலுக்கு கடைசி கட்டத்தில் செய்ய வேண்டிய கூட்டணி பேச்சுவார்த்தைகளை இந்த முறை இப்போதே செய்ய தொடங்கிவிட்டன. ஆனால் திமுக அதை எல்லாம் கண்டுகொள்ளாமல்.. தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
திமுக கவனம் செலுத்தும் 70 தொகுதிகள்
இப்படிபட்ட நிலையில்தான் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்.. திமுக சுமார் 70 இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறதாம். இந்த 70 இடங்களில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறதாம்.
உளவுத்துறை ரிப்போர்ட், உட்கட்சி உளவு ரிப்போர்ட், ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏ, வாய்ப்புள்ள வேட்பாளர் ஆகியோரை பற்றிய ரிப்போர்ட் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாம். அதன்படி ,
கொங்கு மண்டலத்தில் கடந்த சட்டசபை தேர்தல் திமுக மோசமாக செயல்பட்டது. கோவை, சேலத்தில் பெரிதாக திமுக செயல்படவில்லை. அங்கே திமுக அதிகம் கவனம் செலுத்த உள்ளது.
கொங்கு மண்டலத்தில் மொத்தமாக 35 தொகுதிகளில் திமுக கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாம்.
டெல்டா எப்போதும் திமுகவின் கோட்டை. டெல்டாவில் பொதுவாக திமுக பின்னடைவை சந்திக்காது. ஆனால் இந்த முறை டெல்டாவில் சில இடங்களில் திமுக பின்னடைவை சந்திக்கலாம் என்று உளவுத்துறை கூறுகிறதாம். இதனால் அங்கே 7 தொகுதிகளில் திமுக கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாம்.
அடுத்ததாக சென்னையில் திமுக வலுவாக இருந்தாலும் அங்கே 4 தொகுதிகளில் திமுக கவனம் செலுத்தும் என்கிறார்கள்.
இதுபோக தென் மண்டலத்தில் 10 தொகுதிகளில் திமுக கூடுதல் கவனம் செலுத்த லிஸ்ட் எடுக்கப்பட்டு உள்ளதாம்.
இதெல்லாம் போக கடந்த முறை 5000 க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொகுதிகளில் களப்பணிகளை அதிகப்படுத்த திமுக முடிவு செய்து உள்ளதாம்.
மேலும் 10 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகளிலும் களப்பணிகளை அதிகப்படுத்த திமுக திட்டமிட்டு உள்ளதாம். மொத்தமாய் 70 தொகுதிகளில் திமுக அதிக கவனம் செலுத்தி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications