ஸ்டாலின் செய்த மூவ்.. ஓகே சொன்ன கர்நாடகா முதல்வர் சித்தராமையா! தொகுதி மறுசீரமைப்பு மேட்டரில் ஒற்றுமை
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக திமுக குழு இன்று (மார்ச் 12) கர்நாடகாவுக்குச் சென்றது. கர்நாடகாவில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னையில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் பெங்களூரில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். மேலும், இந்தக் குழுவினர் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரையும் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

தென் மாநில அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு
முன்னதாக, ஒடிசா மாநிலத்துக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக எம்.பி தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று (மார்ச் 11) சென்றனர். அங்கு, முன்னாள் முதல்வரும், பிஜூ ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக், ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து முதல்வரின் கடிதத்தை அளித்தனர்.
அப்போது, சென்னையில் வரும் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். ஒடிசாவைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் திமுகவைச் சேர்ந்த பிற குழுக்கள் சென்று, அழைப்பு விடுத்து வருகின்றனர்.
கர்நாடகா சென்ற அமைச்சர் பொன்முடி
கர்நாடக மாநிலத்துக்கு தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் இன்று புதன்கிழமை (மார்ச் 12) சென்றனர். இன்று பெங்களூரில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து சென்னையில் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு விடுத்தனர். துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரையும் சந்தித்தனர்.
"தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தோம். இருவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். சென்னையில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு இருவருமே கண்டிப்பாக வருவார்கள்" என அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார்.
உறுதி கொடுத்த சித்தராமையா
அமைச்சர் பொன்முடி, எம்.பி அப்துல்லா ஆகியோர் வருகைக்கு முன்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார். இதையடுத்து, அவர் சார்பாக சென்ற திமுக குழுவுடன் சந்திப்பு நடைபெற்றது.
ತಮಿಳುನಾಡಿನ ಅರಣ್ಯ ಸಚಿವರಾದ ಡಾ.ಕೆ.ಪೊನ್ನುಮುಡಿ ಮತ್ತು ರಾಜ್ಯಸಭಾ ಸದಸ್ಯರಾದ ಮೊಹಮದ್ ಅಬ್ದುಲ್ಲಾ ಇಸ್ಮಾಯಿಲ್ ಅವರು ಕಾವೇರಿ ನಿವಾಸದಲ್ಲಿ ಮುಖ್ಯಮಂತ್ರಿ @siddaramaiah ಅವರನ್ನು ಭೇಟಿಯಾಗಿ ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರದ ಪ್ರಜಾಪ್ರಭುತ್ವ ವಿರೋಧಿ ಮತ್ತು ದಕ್ಷಿಣ ರಾಜ್ಯಗಳ ವಿರೋಧಿ ನಿಲುವನ್ನು ವಿರೋಧಿಸಿ ನಡೆಯುತ್ತಿರುವ ಪ್ರತಿಭಟನೆ ಕುರಿತು… pic.twitter.com/pHhkbjbxww
— CM of Karnataka (@CMofKarnataka) March 12, 2025
இதையடுத்து, இந்தச் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள கர்நாடக முதல்வர், "தென் மாநிலங்களின் எதிர்ப்புக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும். கர்நாடகாவின் நலன்களுக்கு எதிரான, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் மற்றும் அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைக்கு எதிரான மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தயக்கமின்றி கண்டிக்கிறோம். இது தொடர்பான போராட்டத்தையும் நாங்கள் ஆதரிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள கட்சிகளை அழைப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எவ வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர் அடங்கிய குழு இன்று விஜயவாடா சென்றுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தெலங்கானா மாநிலத்துக்கு நாளை வியாழக்கிழமையும் (மார்ச் 13) செல்ல உள்ளனர்.












Click it and Unblock the Notifications